Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

ஹவுஸ்புல்-3

ஹவுஸ்புல்-3,Housefull-3
  • ஹவுஸ்புல்-3
சாஜித் - பர்கத் எனும் இரட்டையர்கள் இயக்கியுள்ள படம் இது.
04 ஜூன், 2016 - 14:14 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஹவுஸ்புல்-3

நடிகர்கள் : அக்ஷ்ய் குமார், அபிஷேக் பச்சன், ரித்தேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், ஜாக்குலின் பெர்ணான்டஸ், லிசா ஹைடன், நர்கீஸ் பக்ரி, போமன் இரானி

இயக்கம் : சாஜித் - பர்கத்


ஹவுஸ்புல் படங்களின் வரிசையில் மூன்றாவது பாகமாக அக்ஷ்ய்குமார், ரித்தேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், ஜாக்குலின் பெர்ணான்டஸ், லிசா ஹெய்டன், நர்கீஸ் பக்ரி, போமன் இரானி... என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாகியிருக்கும் காமெடி படம் தான் 'ஹவுஸ்புல்-3'. இந்தப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...


கதைப்படி, பதூக் பட்டேல் எனும் மிகப்பெரிய பணக்காரரான போமன் இரானிக்கு, கங்கா(ஜாக்குலின் பெர்ணான்டஸ்), யமுனா(லிசா ஹெய்டன்), சரஸ்வதி(நர்கீஸ் பக்ரி) எனும் மூன்று மகள்கள். போமன் இரானி தன் மகள்களை யாருக்கும் திருமணம் செய்து வைக்கும் எண்ணமில்லாமல் இருக்கிறார். ஆனால் மகள்கள் மூவரும் ஜாக்குலின் - சேண்டி எனும் அக்ஷ்ய் குமாரையும், லிசா - டெடி எனும் ரித்தேஷ் தேஷ்முக்கையும், நர்கீஸ் - பன்ட்டி எனும் அபிஷேக் பச்சனையும் காதலிக்கிறார்கள். சகோதரிகள் மூவரும், தங்கள் காதலர்களை வீட்டிற்கு கண் பார்வையற்றவராக, காதுகேளாதவராக, வாய்பேசமுடியாதவராக வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். போமன் இரானி, மகள்களின் விருப்பப்படி தங்களின் காதலர்களை அவர்களுடன் சேர்த்து வைத்தாரா.?, மூவரின் காதல் கைகூடியதா.? என்பதை காமெடியுடன் விவரிக்கிறது 'ஹவுஸ்புல்-3' படத்தின் மீதிக்கதை.


அக்ஷ்ய் வழக்கம் போலவே காமெடியில் மீண்டும் ஒரு முறை வெளுத்து வாங்கியிருக்கிறார். அவருக்கு பக்கபலமாக ரித்தேஷ் தேஷ்முக்கும், அபிஷேக் பச்சனும் தங்களின் பங்கிற்கு காமெடியில் அசத்தியிருக்கிறார்கள்.


இவர்களைப்போன்று ஹீரோயின்களான ஜாக்குலின் பெர்ணான்டஸ், லிசா ஹெய்டன், நர்கீஸ் பக்ரி ஆகியோரின் நர்கீஸ் தவிர மற்ற இருவரும் தங்களின் நடிப்பில் பளீச்சிட்டிருக்கின்றனர். நர்கீஸ் படம் முழுக்க ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை சலிப்படைய செய்திருக்கிறார். போமன் இரானி, சன்கி பாண்டேவும் தங்களின் பங்கிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.


என்டர்டெயின்ட்மென்ட் படத்தின் தோல்விக்கு பிறகு இரட்டை இயக்குநர்கள் சாஜித் - பர்கத் இயக்கியிருக்கும் படம் இது. ஒட்டுமொத்தமாக படத்தை பார்க்கும்போது இயக்குநர்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனால் திரையில் அந்த மேஜிக் பெரிதாக தெரியவில்லை. மேலும் ஹவுஸ்புல், ஹவுஸ்புல்-2 படங்களுடன் ஒப்பிடும்போது ஹவுஸ்புல்-3 கொஞ்சம் டல்லாகவே தெரிகிறது. படத்திற்கு இசை, வசனக்காட்சிகள் எல்லாம் பலம் தான். ஆனால் ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் கொஞ்சம் சுமார் ரகம் தான். படம் பார்க்க வருபவர்கள் முழுக்க முழுக்க சிரித்துவிட்டு போக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மட்டும் படத்தை இயக்கியிருக்கிறார்கள் இரட்டையர்கள். ஆனால் சில இடங்களில் அதுவே ஓவர் டோஸாகிவிடுவது படத்தின் பலவீனம். இருந்தாலும் ஹவுஸ்புல்-3 படத்தை ஒருமுறை பார்க்கலாம்.


மொத்தத்தில், ''ஹவுஸ்புல்-3 - நாட் ஃபுல்பிள்''



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in