Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஃபேன் (ஹிந்தி)

ஃபேன் (ஹிந்தி),Fan
  • ஃபேன் (ஹிந்தி)
  • ஷாரூக்கான்
  • இயக்குனர்: மனீஷ் சர்மா
15 ஏப், 2016 - 18:25 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஃபேன் (ஹிந்தி)

மனீஷ் சர்மா இயக்கத்தில் ஷாரூக்கான் இரண்டு வேடங்களில் ஒரு பெரிய ஸ்டாராகவும், ரசிகராகவும் மாறுப்பட்ட வேடங்களில் நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் ''ஃபேன்''. இப்படம் ஷாரூக்கானின் உண்மையான 'ஃபேன்' -கள் மற்றும் அனைத்து தரப்பு 'ஃபேன்'களின்ன் மனதையும் கவர்ந்ததா.? என்று இனி பார்ப்போம்...


கதைப்படி ஷாரூக்கான், பெரிய சினிமா ஸ்டார் எனும் ஆர்யன் கன்னா ரோலிலும், ஆர்யனின் தீவிர ரசிகராக கெளரவ் சந்தனா என இரண்டு மாறுப்பட்ட ரோல்களில் நடித்திருக்கிறார். ஆர்யன் போல் நடித்துக்காட்டும் கௌரவ், தன்னை 'ஜூனியர் ஆர்யன்' என்று அழைத்துக் கொள்கிறான். ஒருநாள் ஆர்யனை நேரில் காண மும்பை செல்கிறார் கெளரவ். ஆனால் ரசிகர்களுடன் ரசிகராக ஆர்யனை பார்க்க முடிந்ததே தவிர அவரை நேரில் பார்த்து பேச முடியவில்லை. ஆகையால் ஆர்யனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஒரு குறுக்கு வழியை கையாள அதனால் சிறை செல்கிறார் கெளரவ். இந்த விஷயத்தில் ஆர்யனும், கெளரவ்விற்கு உதவிக்கு செய்ய மறுப்பதோடு கெளரவ்வை கடுமையாக திட்டிவிடுகிறார். இதனால் மனமுடையும் கெளரவ் தான் எந்தளவுக்கு ஆர்யனை நேசித்தாரா.? அதேஅளவுக்கு வெறுப்பதுடன் அவருக்கு எதிரியாகவும் மாறுகிறார். அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் 'ஃபேன்' படத்தின் சுவாரஸ்யமான மீதிக்கதை.


ஷாரூக்கான், ஆர்யன், கெளரவ் என இரண்டு விதமான ரோல்களில் அசத்தலாக நடித்திருக்கிறார். அதிலும் கெளரவ்வின் ரோல் மிகவும் சிலிர்க்க வைக்கிறது. ஷாரூக்கான் சிறந்த படங்களில் 'ஃபேன்' கண்டிப்பாக இருக்கும். ஷாரூக்கான் எனும் ஒற்றை ஆளே 'ஃபேன்' படத்தை முழுக்க தூக்கி நிறுத்துகிறார்.


ஷாரூக் மாதிரியே ஸ்ரேயா, வாலுச்சா டிசோசா, யோகந்திர திக்கு, தீபிகா அமீன், கெளரவ்வின் பெற்றோர் கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இயக்குநர் மனீஷ் சர்மா ஃபேன் படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். ஆர்யன், கெளரவ் இருவருக்கும் சமமான வேடம் கொடுத்து கதைகளத்தை நகர்த்தியிருக்கிறார் மனீஷ் சர்மா. அதேசமயம் படத்தின் முதல்பாதி ரசிகர்களை வசீகரிக்க வைக்கிறது, இரண்டாம் பாகம் சற்று போரடிக்க செய்கிறது. படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும், க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் ஜேஸிங் காட்சிகள், கேமராமேன் மனு ஆனந்த்தின் ஒளிப்பதிவு, விஷால் மற்றும் ஆண்ட்ரியா குராவின் இசையில் 'பேன்' மிளிர்கிறது.


ஷாரூக்கானின் தீவிரமான 'ஃபேன்'கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு 'ஃபேன்'களும் 'ஃபேன்' படத்தை ஒருமுறை பார்க்கலாம்.




மொத்தத்தில், 'ஃபேன்' - 'ஃபென்ட்டாஸ்ட்டிக்'



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in