Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

பிட்டூர் (ஹிந்தி)

பிட்டூர் (ஹிந்தி),Fitoor
  • பிட்டூர் (ஹிந்தி)
  • இயக்குனர்:
12 பிப், 2016 - 16:52 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பிட்டூர் (ஹிந்தி)

நடிகர்கள் : ஆதித்யா ராய் கபூர், கத்ரீனா கைப், தபு

இயக்கம் : அபிஷேக் கபூர்

தயாரிப்பு : சித்தார்த் ராய் கபூர் மற்றும் அபிஷேக் கபூர்


சார்லஸ் டிக்கன்ஸின் பிரபல நாவலான 'கிரேட் எக்ஸ்பெட்டேஷன்'-ஐ மையமாக வைத்து, ஆதித்யா ராய் கபூர், கத்ரீனா கைப் ஆகியோரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பிட்டூர்'. இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...


கதைப்படி, நூர் எனும் ஆதித்யா ராய் கபூர், காஷ்மீரில் இருக்கும் தன் அக்கா மற்றும் மாமாவுடன் வசிக்கிறார். ஒருநாள் பிர்டாஸ் எனும் கத்ரீனா கைப்பை பார்க்கிறார். கண்டதும் காதல் இவரையும் தொற்றி கொள்கிறது. ஆனால் இந்த காதலுக்கு கத்ரீனாவின் அம்மாவான பேகம் ஹஸ்ரத் எனும் தபு எதிர்ப்பு தெரிவிக்கிறார். தன் மகளை படிப்பிற்காக லண்டன் அனுப்பிவிட்டு, இந்த சமூகத்தில் வாழ நல்ல அந்தஸ்துடன் உன்னை வளர்த்து கொண்டு வா என ஆதித்யாவிற்கு கட்டளையும் இடுகிறார். தபுவின் பேச்சை சீரியஸாக எடுத்து கொண்டு ஆதித்யாவும் தன்னை வளர்த்து கொள்ள டில்லி வருகிறார். தபு எதிர்பார்த்தபடியே ஆதித்யாவும் சமூகத்தில் நல்ல நிலைக்கு வருகிறார். இந்தச்சூழலில் ஒரு பார்ட்டியில் மீண்டும் கத்ரீனாவை சந்திக்கிறார் ஆதித்யா. ஆனால் கத்ரீனாவோ, தான், இப்போது பாகிஸ்தான் பிரதமரின் மகன் பிலால் எனும் ராகுல் பட்டின் மனைவி என்கிறார். ஆதித்யாவிற்கு ஒரே அதிர்ச்சி. அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பது பிட்டூர் படத்தின் மீதி காதல் கதை.


ஆதித்யா கபூர், தன் நடிப்பால் ரசிகர்களை கவருகிறார். ஆனால் கத்ரீனாவோ பார்க்க மட்டும் தான் அழகாக தெரிகிறார், ஆனால் நடிப்பில் அந்த அழகு இல்லை. தபு மீண்டும் ஒரு அழுத்தமான வேடத்தில் நடித்து முத்திரை பதிக்கிறார். சிறப்பு தோற்றத்தில் வரும் அதித் ராவ், அக்ஷ்ய் ஓபுராய், ராகுல் பட், அஜய் தேவ்கன், லாரா தத்தா ஆகியோர் எல்லாம் ஓகே என்ற அளவிலேயே ரசிகர்களை கவருகின்றனர்.


இயக்கம் பற்றி சொல்ல வேண்டுமானால், அபிஷேக் கபூர், ஒரு இயக்குநராக தன் ரோலை சரியாக செய்யவில்லை. நல்ல கதை இருந்தும் திரைக்கதை, வசனம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் கோட்டைவிட்டுள்ளார் இயக்குநர். படத்தின் முதல்பாதியில் இருக்கும் சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் துளியும் இல்லை. படத்திற்கு ஆறுதலே அமித் திவேதியின் இசையும், காஷ்மீரை அழகாக காண்பித்த அனாய் கோஸ்வாமியின் ஒளிப்பதிவும் தான்.!


'பிட்டூர்' படத்தின் முன்பாதியில் இருக்கும் சுவாரஸ்யம் பின்பாதியில் இல்லாததும், குழப்பமான திரைக்கதையும் ரசிகனை எழுந்து போக சொல்கிறது.


மொத்தத்தில் ''பிட்டூர் - குழப்பம்!''

ரேட்டிங் - 2/5



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in