Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கயால் ஒன்ஸ் அகைன் (ஹிந்தி)

கயால் ஒன்ஸ் அகைன் (ஹிந்தி),Ghayal Once Again
  • கயால் ஒன்ஸ் அகைன் (ஹிந்தி)
  • இயக்குனர்:
06 பிப், 2016 - 15:59 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கயால் ஒன்ஸ் அகைன் (ஹிந்தி)

நடிகர்கள் : சன்னி தியோல், ஓம் புரி, சோகா அலிகான், நரேந்திர ஜா

இயக்கம் : சன்னி தியோல்


25 ஆண்டுகளுக்கு முன்னர் சன்னி தியோல் நடிப்பில் வெளிவந்த 'கயால்' படத்தின் இரண்டாம் பாகமாக, சன்னி தியோல் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஆக்ஷ்ன் திரைப்படம் தான் ''கயால் ஒன்ஸ் அகைன்''. இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்...


கதைப்படி, அஜய் மெஹ்ரா எனும் சன்னி தியோல், மனஅழுத்த நோய் காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை இழக்கிறார். ஒருபக்கம் துக்கத்தை வெளிப்படுத்தினாலும், மறுபக்கம் தனது பத்திரிகை தொழிலை மன தைரியத்துடன் நடத்தி வருகிறார். கூடவே ஊழல் பேர்வழிகளின் முகத்திரையையும் தன் பத்திரிக்கை மூலமாக வெளிப்படுத்துகிறார். ஒருநாள் ஓய்வு பெற்ற போலீஸ் உதவி கமிஷனரும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஜோ டிசோசா எனும் ஓம் புரி, தனது மகனும் மிகப்பெரிய தொழில் அதிபருமான ராஜ் பன்சால் எனும் நரேந்திரா ஜாவால் கொல்லப்படுகிறார். இந்த சம்பவத்தை ஏதேச்சையாக, ஷிவம் பாட்டீல், அஞ்சால் முஞ்சால், ரிசாப் அரோரா மற்றும் டயானா கான் ஆகியோர் படம் பிடித்துவிடுகிறார்கள். இதைகேள்விப்பட்ட நரேந்திரா, அந்த நான்கு இளைஞர்களையும் கொல்ல முயல்கிறார். இந்த நான்கு இளைஞர்களையும் சன்னி தியோல் எப்படி காப்பாற்றி, உண்மை குற்றவாளியான நரேந்திர ஜாவை சட்டத்தின் முன் எப்படி நிறுத்துகிறார் என்பது 'கயால் ஒன்ஸ் அகைன்' படத்தின் விறுவிறுப்பான ஆக்ஷ்ன் கதை.


ஆக்ஷ்னுக்கு பெயர் போன சன்னி தியோல் இப்படத்திலும் தன் ஆக்ஷ்னை காட்ட தவறவில்லை. கூடவே உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் மனிதர் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒருவரியில் சொல்லவேண்டுமானால் 'சன்னி தியோல் இஸ் பேக்'.


டாக்டராக வரும் சோகா அலிகான், இளைஞர்களாக நடித்திருக்கும் ஷிவம் பாட்டீல், அஞ்சால் முஞ்சால், ரிசாப் அரோரா மற்றும் டயானா கான் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இவர்களை விட வில்லனாக வரும் நரேந்திரா ஜா வில்லத்தனத்தில் அசத்தியிருக்கிறார்.


1999ம் ஆண்டு 'தில்லாகி' படத்திற்கு பிறகு மீண்டும் இப்படத்தின் மூலம் இயக்குநராக வெளிப்பட்டிருக்கிறார் சன்னி தியோல். ஒரு இயக்குநராக சன்னி தியோல் சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். படத்தின் முதல்பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதி மெதுவாகவும் செல்வதும், சன்னி தியோலுக்கு உரித்தான வசனங்கள் இப்படத்தில் இல்லாதது பலவீனம், ரசிகர்களுக்கு இது ஏமாற்றம்.


படத்திற்கான இசை மற்றும் ஒளிப்பதிவும் கூட ஓ.கே. என்ற அளவில் தான் இருக்கிறது. ஆனாலும் சன்னி தியோலின் சிறப்பான நடிப்பு மற்றும் ஆக்ஷ்னுக்காக 'கயால் ஒன்ஸ் அகைன்' படத்தை பார்க்கலாம்.


மொத்தத்தில், 'கயால் ஒன்ஸ் அகைன்' - சன்னி தியோலின், 'ஆக்ஷ்ன் கம் எமோஷன்!'


ரேட்டிங் - 2.75/5



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in