Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

தனு நீனு (தெலுங்கு)

தனு நீனு (தெலுங்கு),Tanu Nenu (Telugu)
  • தனு நீனு (தெலுங்கு)
  • இயக்குனர்:
30 நவ, 2015 - 11:58 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தனு நீனு (தெலுங்கு)

நாயகன் - சந்தோஷ் சோபன்

நாயகி - அவிகா கோர்

இயக்குனர் - ராம் மோகன்


தெலுங்கு திரை உலகில் மறைந்த இயக்குனர் சோபன் அவர்களின் மகன் சந்தோஷ் சோபன், நாயகனாக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் தான் ''தனு நீனு''. ஏற்கனவே படத்தின் டீஸர் படத்தின் மீது ஏக எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது. நாயகன் கிரண்(சந்தோஸ் சோபன்) கால் செண்டரில் வேலை செய்யும் இளைஞன். அமெரிக்க வாழ்க்கை முறையும், NRI மக்களையும் சுத்தமாக வெறுப்பவன். இதற்கு நேர் எதிராக நாயகி கீர்த்தி (அவிகா). இவரின் வாழ்க்கையின் லட்சியமே அமெரிக்காவில் சென்று குடியேறுவது தான்.


இப்படி இருக்கையில் எல்லாப் படமும் போல ஒரு சுபயோக சுப தினத்தில், இருவரும் பார்த்துக்கொள்ள, ரசிகபெருமக்களின் எதிர்பார்ப்பிர்க்கு ஏற்ப கிரண் கீர்த்தி மீது காதலில் வீழ்கிறான். இவ்வாறு நாட்கள் செல்கிறது, பின்னொரு நாளில் அவிகாவும் காதலை ஏற்கிறாள். கீர்த்தியின் தந்தை அவளை ஒரு அமெரிக்க வாழ் NRI க்கு மணமுடிக்க முடிவு செய்கிறார். ஒரு வசதியான இடத்தில் மகளை சேர்க்க முடிவு செய்கிறார். இதன் பின் என்ன நடந்தது? இருவரின் காதல் என்னானது? கீர்த்தி அமெரிக்கா சென்றாரா? கிரண் அமெரிக்காவை வெறுப்பதற்கு என்ன காரணம் என்பதை அறிய படத்தை வெள்ளித்திரையில் பார்த்தாக வேண்டும்.


அறிமுக படத்திலேயே நடிப்பால் முத்திரை பதிக்கிறார் சந்தோஷ் சோபன். உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் சந்தோஷின் நகைச்சுவை காட்சிகளில் உடல்மொழியிலும் மெனக்கெடல் தெரிகிறது. வசன உச்சரிப்புகளிலும் தெளிவு காட்டி இருக்கும் சந்தோஷை, வரும் நாட்களில் முன்னணி நடிகர்களின் வரிசையில் எதிர்பார்க்கலாம்.


அடுத்தாக அவிகா, அழகாக வசீகரிக்கிறார், இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது. அவரின் தந்தையாக வரும் ரவி பாபுவும் பாத்திரம் அறிந்து பளிச்சிடுகிறார். படத்தின் பின்பாதியில் உணரிச்சிகளை வெளிப்படுத்த போதுமான காட்சிகள் இல்லை. இடைவேளையில் எகிற வைத்த எதிர்பார்ப்பை பின்பாதியில் தக்கவைக்க தவறிவிட்டார். கடைசியில் வரும் ரவி பாபு சம்மந்தப்பட்ட காட்சிகளில் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது. படத்தை முடிக்க வேண்டுமே என அவசரப்படு முடித்தது போல் இருக்கிறது.


இசை சன்னி M R அளவாக காட்சிகளுக்கு தேவையான அளவு மட்டும் ஒலிக்கிறது. இப்படத்தின் வசனங்களும் NRI கலாச்சாரத்தை சாடும் வகையில் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. ராம் மோகன் தான் படத்தின் இயக்குனர், தனது முதல் படத்திலேயே தனது பணியை சரியாக செய்திருக்கிறார். அழகான காதல் கதையை கையில் எடுத்து தகுந்த வையில் திரைக்கதை அமைத்து நேர்த்தியான காட்சிகளுடன் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார்.


முக்கியமாக NRI சம்ப்ந்தப்பட்ட காட்சிகளை அதற்கான லாஜிக்குடன் தற்கால நிதர்சனத்துட்டன் காட்சிப்படுத்தியிருக்கிறார். சிரிய பட்ஜட் படமாக இருந்தாலும், ஒளிப்பதிவும் கலை இயக்கமும் படத்திற்கு நன்றாக கை கொடுத்திருக்கிறது. படத்தை எல்லோரும் பார்க்கும் விதத்தில் தந்தமைக்கு நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.


தனு நீனு - அழகான காதல்!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in