Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஜிப்பா ஜிமிக்கி

ஜிப்பா ஜிமிக்கி,Jippa Jimikki
  • ஜிப்பா ஜிமிக்கி
  • இயக்குனர்:
09 அக், 2015 - 17:32 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஜிப்பா ஜிமிக்கி

தினமலர் விமர்சனம்


ஹீரோ - கீரிஸ்க் திவாகர்




ஹீரோயின் - குஷ்பு பிரசாத்




இயக்கம் - ரா.ராஜசேகர்


புதுமுகங்களை வைத்துக் கொண்டு புது மாதிரியான காதல் பயணம் செய்கிறேன்... சொல்கிறேன்... பேர்வழி... என, ரசிகனை புரட்டி எடுத்து போரடித்திருக்கும் படம் தான் 'ஜிப்பா ஜிமிக்கி'. யப்பா அப்படத்தை நினைத்தாலே இன்னமும் வலிக்கிறது.!


நெருங்கிய நண்பர்கள் இருவரது ஆண், பெண் வாரிசுகள் குழந்தை பருவத்தில் இருந்தே எதிர் எதிர் துருவங்கள். அந்த இருவரும் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் இருவரையும் இல்வாழ்க்கையில் ஒன்றிணைக்க நினைக்கின்றனர் இருவரது நட்பு அப்பாக்களும். தீடீர் நிச்சயதார்த்தத்திற்கு வராமல் நாயகி டிமிக்கி கொடுத்து விட., பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப., நிச்சயத்தில் கலந்து கொண்டு அதன்பின் டேக்கா கொடுக்க நினைக்கிறார் ஹீரோ.


இருவரது எண்ணமும் பொய்த்து போகும்படி அமைகிறது. இவர்களது அலுவலக நண்பர் ஒருவரது மைசூர் - கூர்க் பகுதி திருமண விழா. அந்த திருமண விழாவிற்கு செல்லும் இருவரும் வழியில் சந்திக்கும் மனம் ஒத்த தம்பதிகள் சிலரும், நல்மனிதர்கள் சிலரும் இவர்களது மாற்றத்திற்கு எப்படி? காரணமாகின்றனர்..? என்பது தான் ஜிப்பா ஜிமிக்கி படத்தின் கரு, கதை, களம், காட்சிபடுத்தல், ரசிகனை படுத்துதல் எல்லாம்.


அறிமுக நாயகர் கீரிஸ்க் திவாகர் ரொம்பவே ரிஸ்க் எடுத்து ரசிகனை சோதிக்கிறார் என்றால்., அறிமுக நாயகி குஷ்பு பிரசாத்தும் அதற்கு மேல் சோதித்திருக்கிறார். இவர்கள் இருவரையும் தாண்டி குஷ்பு பிரசாத்தின் அப்பாவாக வரும் தாயுமானவன் மதி தந்தையுமானவனாக மாறி கொல்கிறார்.


ஆடுகளம் நரேன், லாரி டிரைவர் இளவரசு, கர்நாடக விவசாயி நான் கடவுள் ராஜேந்திரன், பாவாலட்சுமணன், போண்டா மணி, சுதா உள்ளிட்டவர்களின் நடிப்பு ஆறுதல் என்றாலும் அவையும் நாடகத்தன்மையுடன் படம் பிடிக்கப்பட்டிருப்பது சற்றே போரடிக்கிறது.


சரவண நடராஜனின் ஒளிப்பதிவில் கூர்க் பகுதி குளிர்ச்சி! ரணிப்பின் இசை, சுதாவின் படத்தொகுப்பு உள்ளிட்டவைகள் இன்னும் சற்றே பளீர்... என பளிச்சிட்டிருக்கலாம்!


ஆக மொத்தத்தில் ரா.ராஜசேகரின் எழுத்து, இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் கர்நாடகாவில் உள்ள கூர்க் எனும் குடகு பகுதி டாக்குமெண்ட்ரியாக வெளிவந்திருக்கும் ஜிப்பா ஜிமிக்கி" ரசிகனின் பொறுமையை சோதித்து "டப்பா டான்ஸ் ஆட விடுகிறது!


ஜிப்பா ஜிமிக்கி - டப்பா டான்ஸ் !!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in