Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் (ஹிந்தி)

செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் (ஹிந்தி),Second Hand Husband
  • செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் (ஹிந்தி)
  • ஜிப்பி க‌ிரேவல்
  • டினா அகுஜா
  • இயக்குனர்: ஷ்மீப் காங்
04 ஜூலை, 2015 - 15:36 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் (ஹிந்தி)

பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகள் டினா அகுஜா, செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் படத்தின் மூலம், பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளதோடு மட்டுமல்லாது, பஞ்சாபி திரையுலகின் முன்னணி இயக்குநர் ஸ்மீப் காங், பாலிவுட்டில் இயக்குநராக இதில் அறிமுகமாகியுள்ளார்.


ஜிப்பி கிரேவல் (ராஜ்பீர்) மற்றும் டினா அகுஜா (குர்பிரீத்) இருவரும் காதலர்கள். விரைவில் திருமணம் செய்யும் முடிவில் இருக்கின்றனர். இவர்களது திருமணத்திற்கு, ராஜ்பீரின் முன்னாள் மனைவி கீதா பாஸ்ராவிற்கு (நேகா), பணஉதவி செய்துவரும் நிகழ்வு தடையாக இருக்கிறது. இந்த பணஉதவி வழங்குவதை நிறுத்தவேண்டுமென்றால், நேகாவிற்கு விரைவில் மீண்டும் திருமணம் நடைபெற வேண்டும். இதற்காக, பஞ்சாப் போலீஸ் உயர் அதிகாரி ராகேஷ் சிங்கை (விஜய் ராஜ்)மணமுடிக்க திட்டமிடுகிறார். ஆனால், இதற்கு நேகா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. தனது முதலாளி தர்மேந்திரா (அஜித் சிங்), தனது மனைவி ரதி அக்னிஹோத்ரியை விவாகரத்து செய்திருந்த நிலையில், அவரே, நேகா தரப்பினரின் தேர்வாக இருந்தது.ஆனால், அதற்குள்ளாக, அஜித் சிங் வேறொரு பெண்ணை கரம்பிடித்துவிடுகிறார். அஜித் சிங்குடன் தன்னை இணைத்து வைக்குமாறு, ராஜ்பீரிடம் நேகா வேண்டுகோள் விடுக்கிறார். மற்றொரு பெண்ணை கரம்பிடித்திருந்தபோதிலும், தனது முன்னாள் மனைவி மீது அஜித் சிங் தீராக்காதல் கொண்டிருக்கிறார். நேகாவுடன், அஜித் சிங் சேர்ந்தாரா...இல்லையா...என்பதே படத்தின் மீதிக்கதை.


விவகாரமான கதை என்றாலும், படத்தை இயக்கிய விதத்தில், இயக்குநர் ஸ்மீப் காங்கின் நேர்த்தி வெளிப்படுகிறது. ஸ்மீப் காங், இயக்கத்தில் செலுத்திய கவனத்தைவிட, வசனர்கத்தா மற்றும் எடிட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது பல இடங்களில் தெரிகிறது. படத்தில் பல்வேறு இடங்களில் காட்சிகள், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் உள்ளன. இசை, படத்திற்கு பெரும் பலம். ஜிப்பி கிரேவல், டான்ஸ் ஸ்டெப்களில் தனித்துவம் காட்டியுள்ளார்.


அறிமுக படம் என்பதால், படத்தில் சிறிது நேரத்திற்கே தலைகாட்டியுள்ளார் நடிகர் கோவிந்தாவின் மகன் டினா குஜா. டிஜா அகுஜா, தனது தந்தை கோவிந்தா மற்றும் மற்ற நடிகர்களிடமிருந்து நடிப்பை மட்டுமல்லாது, ஹிந்தி வார்த்தைகளையும் எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்று கற்றால் தான் அவருக்கு எதிர்காலம். காமெடி காட்சிகளில், தர்மேந்திரா அசத்தியுள்ளார். சாதாரண காட்சிகளையு, தனது வசன உச்சரிப்பின் மூலம் கலகலப்பூட்டியுள்ளார்.


பாடல் பிரியர்கள் மற்றும் சீப்பான ஜோக் பிரியர்களுக்கு மட்டும் இப்படம் பிடிக்கும்.


ரேட்டிங் : 2/5.....



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in