Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

ஏபிசிடி2 (ஹிந்தி)

ஏபிசிடி2 (ஹிந்தி),ABCD2 (Hindi)
19 ஜூன், 2015 - 15:40 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஏபிசிடி2 (ஹிந்தி)

சுரேஷ் (வருண் தவான்) மற்றும் வின்னிக்கு ( ஸ்ரத்தா கபூர்) சொந்தமான மும்பை ஸ்டன்னர்ஸ் நடனக்குழு, ஹம் கிஷி சே காம் நாஹின் ரியாலிட்டி ஷோவில், குறிப்பிட்ட பிரச்னைக்காக, தகுதிபெற முடியாமல் போய்விடுகிறது. இதனையடுத்து, அக்குழுவில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக, அக்குழுவை விட்டு விலகத்துவங்குகின்றனர். இழந்த பெருமையை மீண்டும் அடையவும், அதற்காக தங்களை புதுப்பித்துக்கொள்ள சுரேஷ் திட்டமிடுகிறார். அமெரி்க்காவின் லாஸ் வேகாஸ் நகரத்தில் நடைபெற உள்ள சர்வதேச ஹிப் பாப் போட்டியில் கலந்துகொள்ள தீர்மானிக்கிறார். இதற்காக, குடிப்பழக்கத்திற்கு அடிமையான விஷ்ணுவின் (பிரபுதேவா) உதவியை சுரேஷ் நாடுகிறார். விஷ்ணு, சுரேஷ் குழுவினருடன் இணைந்து லாஸ் வேகாஸ் செல்கின்றனர். அங்கு பட்டத்தை அவர்கள் வென்றனரா அல்லது இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை....


2013ம் ஆண்டு வெளிவந்த ஏபிசிடி படத்தை இயக்கிய அதே ரெமோ டி சோஷா தான், ஏபிசிடி 2 படத்தையும் இயக்கியுள்ளார். அடுத்த சீன் இதுதான் வரும் என்று அனைவராலும் கணிக்கமுடிவதே, படத்தின் பலவீனம். சர்வதேச அளவிலான நடனக்காட்சிகள், பாப்பிங் மற்றும் லாக்கிங் நடனக்காட்சிகள் படம் பார்ப்பவர்களுக்கு புதுவித அனுபவத்தை தருகிறது. ஹிப் பாப் நடனக்காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. அக்காட்சிகளே, படத்திற்கு பெரும்பலம். டான்ஸ் அபிமானிகளுக்கு சிறந்ததொரு படம். மயூர் புரியின் வசனங்களில், இளமை ததும்புகின்றன.


விஜய் அரோராவின் ஒளிப்பதிவு, படத்திற்கு பெரும்பலமாக உள்ளது. கிராண்ட் கேன்யான் மற்றும் லாஸ் வேகாஸ் படக்காட்சிகள், பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக்குகின்றன.

வருண் தவான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக செய்துள்ளார். படம் முழுவதும் வியாபித்திருந்தாலும் எவ்விடத்திலும் சலிப்பு தராத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஸ்ரத்தா கபூர், இப்படத்தின் மூலம் புதிய பரிமாணத்தை காட்டியுள்ளார். தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை, கனகச்சிதமாக செய்துள்ளார். நடனத்திலும் அசத்தியுள்ளார். பிரபுதேவாவின் பங்களிப்பு, படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. நடனப்பயிற்சியாளர் கேரக்டரில் வரும் பிரபுதேவா, நடிப்பி்ல் மிளிர்ந்துள்ளார்.




ஏபிசிடி 2, சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக வெளியாகியுள்ளது. டான்ஸ் அபிமானிகளுக்கு, படம் இனிய விருந்து...


ரேட்டிங் : 3/5....



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in