Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சூட்டிங் ஸ்பாட் »

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது,Enakku veeru engum kilaigal kidaiyathu
  • எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
  • நடிகர்: கவுண்டமணி
  • புதுமுகம்
  • இயக்குனர்: கணபதி பாலமுருகன்
31 ஆக, 2016 - 14:10 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது

காமெடி நாயகர் கவுண்டமணி , கதாநாயகராக நடித்து, புதியோர் ஜெயராம் புரடக்ஷன்ஸ் ஜெ.சண்முகத்தின் தயாரிப்பிலும் , கணபதி பாலமுருகனின் இயக்கத்திலும் ., வெளிவந்திருக்கும் மற்றுமொரு படம் தான் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது . ஆனால் , இது .,மற்ற படம் மாதிரியோ , மற்றவர் படம் மாதிரியோ சாதாரண படம் கிடையாது ... சமூக அவலங்களுக்கு எதிராக சிரிக்கவும் , சிந்திக்கவும் வைக்கும் கவுண்டரின் சட்டையர் காமெடி படமாக்கும்!


கதைப்படி ., சினிமா படப்பிடிப்புகளில் நட்சத்திரங்கள் உண்ண , உறங்க, உடை மாற்ற... வசதியாக பயன்படுத்தப்படும் கேரவன் வண்டிகளை வாடடைக்கு விடும் தொழில் செய்து வருகிறார் கவுண்டமணி .கூடவே, எண்ணற்ற காதல் ஜோடிகளுக்கு தன் தலைமையில் கலப்பு திருமணங்களும் நடத்தி வைக்கும் சேவையும் செய்யும் சமூக சேவகரான கேரவன் கிருஷ்ணன் எனும் கவுண்டர் ., பேஸ்புக் , ட்விட்டர் ...என சமூக வலைதளங்களிலும் ஏகப்பிரபலம்.


இந்நிலையில் ., தன் ஆசை மனைவியின் அன்பு கட்டளையையும் , உங்களுக்கு நேரம் சரியில்லை ...ஆபத்து எனும் எச்சரிக்கையையும் மீறி ., மதுரை ஏரியா அரசியல்வாதி ஒருவரின் மகளது காதலுக்கு கவுண்டர் ஆதரவாக களம் இறங்குகிறார். அதில் கவுண்டரின் தலை தப்பியதா ? காதல் ஜோடி கல்யாணத்தில் இணைந்ததா ..? என்பது தான் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தின் கரு , கதை , களம் ,ரசிகனை சற்றும் படுத்தாத காட்சிப்படுத்தல் ... எல்லாம்.


நக்கல்,நையாண்டியுடன் சிந்திக்கவும் வைப்பதில் கவுண்டமணிக்கு நிகர் கவுண்டமணி தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் கவுண்டர் . சற்றே , முதுமை முகத்தில் தெரிந்தாலும் குரல் வெங்கலம்தான் ! சகட்டுமேனிக்கு., சக சினிமாக்கார பிரபலங்களையும் , அரசியல்வாதிகளையும் , சமூக அவலங்களையும் , அக்கிரமங்களையும் சேர்த்து வைத்து நக்கலடித்து ... வழக்கம் போலவேநம்மை மனம்விட்டு சிரிக்கவும் சற்றே சிந்திக்கவும் வைக்கிறார் , கவுண்டமணி!வாவ்!


"அண்ணே டைரக்டர் எஸ்.ஜே.குர்யா , மியூசிக் டைரக்டர்ஆயிட்டாருண்ணே ... மியூசிக் ஜி.வி .பிரகாஷ் , ஹீரோ ஆயிட்டாருண்ணே ...." எனும் உதவியாளர் வேல்முருகனைப் பார்த்து "அப்போ , இனி தமிழ் சினிமா தலைநிமிர்ந்திடும்.... போ போய் பிழைப்பை பாரு .... அவனவன் , அவனவன் பிழைப்பை பார்த்தா போதாதா.!? "என நக்கல் அடிப்பதில் தொடங்கி ., "அது என்ன ?ஆ .. ஊ....ன்னா, அவனவன் மதுரை என்னோடது , உன்னோடதுன்னு சொந்தம் கொண்டாடுறீங்க ... எவனாவது தென்னாற்காடு என்னுது , வட ஆற்காடு என்னுது , காஞ்சிபுரம் மாவட்டம் என்னுதுன்னு சொந்தம் கொண்டாடுறாங்களா ? இல்லே நீங்க தான் கொண்டாடுறீங்களா ..? "என மதுரைக்கார நடிகர் கம் அரசியல் தலைவர் முதல், அ ன்னா அரசியல் வாரிசு வரை ....போட்டு தாக்குவதைப் பார்த்து தியேட்டரே சிரிப்பலையில் அல்லோல்ல கல்லோல படுகிறது . வாவ் கீப் இட் அப் கவுண்டர் சார்!


கவுண்டரின் கடவுள் பக்தி நிரம்பிய அன்பு மனைவியாக நடுத்தர வயது லுக் குடைய புதுமுகம் சனா, இளம் காதல் ஜோடிகள் பிரபானந்தன் -திவ்யாவாக ., சுந்தரபாண்டியன்சவுந்தரராஜா , மெட்ராஸ் ரித்விகா, கவுண்டரிடம் அடி உதைபடும் உதவியாளராக பிரபலபாடகர்வேல்முருகன் , மதுரை அரசியல்வாதியாக , ரித்விகாவின் அப்பாவாக மூணார் ரமேஷ், அவரது விசுவாசத் தொண்டராக சதுரங்கவேட்டை வளவன்,

ரித்விகாவின் காதல் சித்தப்பாவாக வாசகர் ,ராம் ஸாக ராம்ஸ் உள்ளிட்ட எல்லோரும் பத்திரமறிந்து பளிச்சிட்டு இருக்கின்றனர் . பலே , பலே!


எஸ்.என் .அருணகிரியின் இசையில் , இளைய கம்பன் , கார்த்திக் நேத்தாவின் எழுத்தில் .,கோடம்பாக்கம் மறு பேரு ... , அதான் இதானு பார்த்தேன் ... , புட்டி, புட்டி ... உள்ளிட்ட பாடல்கள் பலே ராகம். பின்னணி இசைபரவாயில்லை ரகம். டி.கண்ணணனின் ஒளிப்பதிவு இப்படத்திற்கு ஏற்ற பதிவு ,ராஜா முகம்மதுவின் படத்தொகுப்பும் பக்கா தொகுப்பு ,ஏ.ஆர்.மோகனின் கலை இயக்கத்தில் கேரவன் கள் கவருகின்றன .


கணபதி பாலமுருகனின் எழுத்து , இயக்கத்தில் "சில பேரு , ஒய்ப் இல்லாம கூட இருப்பான் ... ஆனா ஒய் - பை இல்லாம இருக்க வே மாட்டான் ... என்பது உள்ளிட்ட எண்ணற்ற ரைமிங் - டைமிங் வசனங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பது படத்திற்கு பலம் .


இந்த வயதிலும் கவுண்டரின் டயலாக் டெலிவரியையும் மாடுலேஷனையும் பார்த்து மெய்சிலிர்க்கிறது ரசிகர் கூட்டம் . அதே நேரம், இந்த வயதிலும் அவருக்கு டான்ஸும் , பைட்டும் ... எதற்கு ? எனும் கேள்வி எழாமலும் இல்லை . இயக்குன் கணபதி பாலமுருகன் நினைத்திருந்தால் ., இவற்றைக் குறைத்திருக்கலாம்!


மற்றபடி., காதலர்களின் கலப்புத் திருமணத்திற்கு உதவி செய்யும் கேரவன்கிருஷ்ணனின் கதையாக ., சமூக அவலங்களுக்கு எதிரான சட்டையர் படமாக வந்திருக்கும் "எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது" படத்தை எல்லாத் தரப்பினரும் பாரக் கலாம் .,கவலை மறந்து சிரிக்கலாம் , சிந்திக்கலாம்!


ஆக மொத்தத்தில் , "எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது - கவுண்டருக்கும் அவரது காமெடிக்கும் நிகர் கிடையாது!"



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in