Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

தலைப்புசெய்தி

தலைப்புசெய்தி,Thalaippu Seithi
பிரேம்ராஜ் இயக்கியுள்ள படம் தலைப்புசெய்தி.
16 மே, 2015 - 18:39 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » தலைப்புசெய்தி

பிரகாஷ்ராஜ், பூமிகா நடித்த, ''பெண் அடிமை இல்லை'' படத்தை தயாரித்த ரமணா பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படத்திற்கு “தலைப்பு செய்தி“ என்று பெயரிட்டுள்ளனர். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படமே தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த படத்தில் ஜெகபதிபாபு கதாநாயகனாக நடிக்கிறார். இவர் லிங்கா படத்தில் வில்லனாக நடித்தவர். கதாநாயகியாக சார்மி நடிக்கிறார். மற்றும் சத்யபிரகாஷ், காந்தி ஆகியோர் நடிக்கிறார்கள். பிரேம்ராஜ் இயக்கியுள்ளார்.

நம்பர் ஒன் சேனலாக மாற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் ஒரு டிவி நிர்வாகம் அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது. அந்த டிவியில் செய்தியாளராக வேலை செய்யும் சார்மியிடம் ஒரு பென்டிரைவ் கிடைக்கிறது. அதில் இருக்கும் காட்சிகள் அதிர்ச்சிகரமானதாகும். அதை கைபற்ற நினைக்கும் சமூக விரோத கும்பலுக்கும், ஜெகபதிபாபு, சார்மிக்கும் இடையே நடக்கும் அதிரடி சம்பவங்கள் தான் தலைப்பு செய்தி. படு ஆக்ஷன் படமாக “ தலைப்பு செய்தி உருவாகி உள்ளது.


இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in