Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சூட்டிங் ஸ்பாட் »

ஒரு மெல்லிய கோடு

ஒரு மெல்லிய கோடு,Oru Melliya kodu
  • ஒரு மெல்லிய கோடு
  • அர்ஜூன்
  • அக்ஷாபட்
  • இயக்குனர்: ஏ.எம்.ஆர்.ரமேஷ்
25 மார், 2016 - 17:18 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » ஒரு மெல்லிய கோடு

குப்பி, வனயுத்தம் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியதன் மூலம் பரபரப்பான இயக்குனர் என பாராட்டப் பட்ட A.M.R.ரமேஷ் தற்போது இயக்கும் புதிய படத்திற்கு “ ஒரு மெல்லிய கோடு “ என்று பெயரிட்டுள்ளார். இந்தப்படத்தில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் ஷாம் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷாபட் நடிக்கிறார். மற்றும் மனிஷாகொய்ராலா , ரவிகாலே, ஜீன், அருள்மணி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை - இசைஞானி இளையராஜா


எடிட்டிங் - K.V.கிருஷ்ணாரெட்டி / ஒளிப்பதிவு - சேதுஸ்ரீராம் / நடனம் - விட்டல்


கலை - ஆனந்தன் / நிர்வாக தயாரிப்பு - இந்துமதி, தனஜெய் குன்டப்பூர்


தயாரிப்பு மேற்பார்வை - அண்ணாமலை


தயாரிப்பு - அக்ஷயா கிரியேசன்ஸ்


கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - A.M.R. ரமேஷ்


படம் பற்றி இயக்குனர் ரமேஷ் கூறியதாவது...இது வழக்கமான படமாக இருக்காது. திரைக்கதையில் இது வேறு ஒரு கோணத்தை உருவாக்கும். இந்த படத்திற்காக சென்னையை அடுத்த பூந்தமல்லியில் பல லட்சம் ரூபாய் செலவில் அரங்குகள் அமைக்கப்பட்டது. தடயவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டது. சந்தேகப்படும்படியான மரணங்களின் உண்மை நிலையைக் கண்டறிய பிரேதங்களை ஆய்வு செய்யும் அரங்கு அது!அதில் அர்ஜுன் - ஷாம் - மனிஷா கொய்ராலா ஆகியோர் பங்கேற்க நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. நடிகர் அர்ஜுன்... இது என் சினிமா கேரியரில் புதுசு..இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து அசை போட்டுக் கொள்ள இது போன்று ஒரு படத்தில் நடித்தோமே என்று பெருமைப்பட்டுக் கொள்ளும்படியான கதாப்பாத்திரம் பெருமையாக இருக்கு என்றார்.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in