Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

இது என்ன மாயம்

இது என்ன மாயம்,Ithu enna mayam
06 ஆக, 2015 - 13:13 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » இது என்ன மாயம்

தினமலர் விமர்சனம்


வௌ்ளக்கார துரை வெற்றிக்கு பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வௌிவந்திருக்கும் திரைப்படம், அமலாபாலின் ஆத்துக்காரர் விஜய் இயக்கத்தில் சைவம் படத்தையடுத்து வந்திருக்கும் திரைப்படம், மாஜி கதாநாயகி மேனகாவின் வாரிசு கீர்த்தி சுரேஷ், தமிழில் அறிமுகமாகியிருக்கும் படம் என... எண்ணற்ற அருமை, பெருமைகளுடன் இன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் இது என்ன மாயம்.


கல்யாண புரோக்கர் என்பது மாதிரி லவ் புரோக்கராக தன் டீமுடன், காதலர்களுக்கு, காசுக்கு உதவி செய்து செயல்படுவதையே தொழிலாக கொண்டிருக்கிறார் ஹீரோ விக்ரம் பிரபு. அதாகப்பட்டது, ஒருதலைக்காதலில் தவிப்பவர்களுக்கு இன்னொரு தலையிடமிருந்து காதலை கொஞ்சமே கொஞ்சம் கூலிக்கு, வலிய சென்று தருவது தான் விக்ரம் பிரபு அண்ட் கோவினர் வேலை. அதுகண்டு., விக்ரம் பிரபுவின், மாஜி காதலி கீர்த்தி சுரேஷையையே தன் காதலியாக கேட்டு ஒருதலைக்காதலுடன் இவர்களது உதவி நாடி வருகிறார் பெரும் தொழிலதிபர் நவ்தீப். அவருக்கு கீர்த்தி சுரேஷை ஒரு கோடி கூலிக்கு செட்-அப் செய்வதாக உறுதி கூறி போக்கு காட்டி, தன் மாஜி காதலி கீர்த்தி சுரேஷை, விக்ரம் பிரபு கைபிடிக்கிறாரா? அல்லது நவ்தீப்பிற்கு கட்டி வைக்கிறாரா...? என்பது தான் இது என்ன மாயம் படத்தின் கரு, கதை, எல்லாம். இதனால் விக்ரம் பிரபு, நவ்தீப்பின் விரோதத்தை சம்பாதித்தாரா.? கீர்த்தி சுரேஷின் காதலை எளிதாக திரும்ப பெற்றாரா.? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு எதிர்பாராத டுவிஸ்ட், சஸ்பென்ஸ் எல்லாம் கலந்து அதிலும் கிளைமாக்சில் டுவிஸ்ட்டோ டுவிஸ்ட் எனுமளவிற்கு.... வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் அளிக்கிறது இது என்ன மாயம் படத்தின் மீதிக்கதை.


அருணாக விக்ரம் பிரபு, வித்தியாசமான பாத்திரத்தில் காதல் புரோக்கராகவும், கீர்த்தி சுரேஷின் காதலராகவும் களை கட்டியிருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷனிலிருந்து லவ்வுக்கு மாற, லவ் வித் ஆக்ஷன் காமெடிக்கு மாற., தம்பி விக்ரமுக்கு இன்னும் கொஞ்ச நாள் பிடிக்கும்போல...!


கீர்த்தி சுரேஷ், மாஜி நாயகி மேனகாவின் வாரிசு என்பதையும் தாண்டி மப்பும், மந்தாரமாக தன் கயல்விழிகளால் ரசிகர்களை சீட்டோடு கட்டிப்போடுகிறார். அம்மணி்க்கு அவரது அழகிய கன்னக்குழிக்காவே தமிழ் சினிமாவில் ஒரு வல்லிய ரவுண்டு நிச்சயம்!


சந்தோஷாக வரும் நவ்தீப், விக்ரம் பிரபுவின் அப்பாவாக வரும் நாசர், அம்மா அம்பிகா, சார்லி, லொள்ளுசபா ஜீவா, பாலாஜி வேணுகோபால், ஆர்.ஜே.பாலாஜி, அஜய் டைடஸ், லுத்புதீன் பாஷா, காவ்யா ஷெட்டி, சுதாகிருஷ்ணா அய்யர் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து, பாத்திரத்திற்கு மேலாகவே நடித்திருக்கின்றனர்.


ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில், இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்... உள்ளிட்ட ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமான ஒய்யாரா ராகம். அனைத்தும் சுபராகம் என்பது இனிமை.


நீரவ்ஷாவின் ஔிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் துடைத்து வைத்த வௌ்ளி குத்துவிளக்காய் மிளிர்வது இது என்ன மாயம் படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. ஆன்டனியின் படத்தொகுப்பும் நச்-டச்.


விஜய்யின் எழுத்து - இயக்கத்தில், இது என்ன மாயம் படத்தின் டைட்டிலுக்கு ஏற்பவே சினிமாட்டிக் - டிரமாட்டிக் காட்சிகள் கொஞ்சமே கொஞ்சம் மாய்மாலமாக, மாயஜாலமாக சற்றே நெருடலாக தெரிந்தாலும் இது என்ன மாயம் - இளைஞர்களை கவரும் காதல் மயம்!




குமுதம் சினி விமர்சனம்




இது என்ன மாயம்


அமலாபாலின் வீட்டுக்காரர் விஜய் இயக்கிய லேட்டஸ்ட் படம் எப்படி இருக்கும்? இதிலென்ன சந்தேகம்? லவ் ஸ்டோரிதான்!

டிரெய்னிங் கொடுத்து காதலுக்காக ஏங்குபவர்களை ஒன்று சேர்க்கும் கலகலப்பான பிசினஸை செய்கிறான் ஹீரோ. ஏகப்பட்ட பணத்துடன் ஒருவன், ஒரு பெண்ணைக் காதலிக்க உதவி கேட்கிறான். அந்தப் பெண் ஹீரோவின் காதலி! அப்புறம் என்ன ஆச்சு என்பதுதான் இது என்ன மாயம்.

ஆக்ஷனிலிருந்து காதலுக்கு தாவியிருக்கிறார் விக்ரம்பிரபு. இதயம் முரளி டைப் பாத்திரம் ஓகே.

கீர்த்தி சுரேஷ், பழைய ஹீரோயின் மேனகாவின் புத்திரி. மார்டன் தோற்றமும், சிரிக்கும்போது விழும் உதட்டுச் சுழியும் அள்ளுகிறது. (ஓர் அறிவு பூர்வமான ஆராய்ச்சி; அம்மாவுக்கு உதட்டின் மேல் அழகு மச்சம் என்றால் பெண்ணுக்குத் தாடையில் அதே மச்சம்) ஆனால் நிறுத்தி நிதானமாகப் பேசுவது ஏனோ?

நவ்தீப் ஸ்மார்ட்.

கொஞ்ச நேரம் வந்தாலும் சார்லியும், நாசரும் தாங்கள் சீனியர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

படத்தின் பெரிய பலம் ஜி.வி. பிரகாஷின் ரொமான்டிக் பாடல்களும், நிரவ்ஷாவின் சேம் கேமராவும்!

சில காட்சிகள் ரிப்பீட் ஆவதும், ட்ராமா மாதிரி படம் போவதும் கொஞ்சம் நெளிய வைக்கிறது.


இ.எ.மா.: காதலர்களுக்காக




குமுதம் ரேட்டிங் : ஓகே



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in