Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

தப்பா யோசிக்காதீங்க

தப்பா யோசிக்காதீங்க,Thappa Yosikkadeenge
  • தப்பா யோசிக்காதீங்க
  • நடிகர்: ராஜா (புதுமுகம்)
  • நடிகை:சனிலா
புதியவர் சுல்தான்ஸ் இயக்கும் படம் தப்பா யோசிக்காதீங்க.
10 ஜூலை, 2015 - 16:38 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » தப்பா யோசிக்காதீங்க

நிரஞ்சனா புரெடக்சன்ஸ் G. அனில்குமார் தயாரிப்பில் சுல்தான்ஸ் இயக்கத்தில் 'தப்பா யோசிக்காதீங்க' .எனும் புதிய திரைப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படம் 11 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட முதல் இந்திய தமிழ் திரைப்படம் இம்மாத இறுதியில் திரைக்கு வெளிவர உள்ளது .


இன்றைய வாழ்க்கைச்சூழலில் ஒரு மனிதன் தற்காலிக பணியிடைநீக்கத்தில் இருந்தால், அந்த குடும்பத்தினால் அவனுக்கு ஏற்படும் அவலங்கள் என்ன? அவன், பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்தும் போது இந்நிலையில் அவனுக்கு ஏற்படும் இன்னல்களை எப்படி கையாள்கிறான் என்பதை மிக தெளிவாக இத்திரைப்படம் விளக்கும்.


இப்படத்தின் புதுமுக அறிமுக கதாநாயகன் S.P ராஜா, கதாநாயகியாக ஜோதிஷா, சனிலா, மற்றும் சிசர் மனோகர், மகி, பேபி நட்சத்திரம் மோனிகா மற்றும் பல முக்கிய 44 கதாபாத்திரங்கள் நடிக்கின்றனர்.


இத்திரைப்படத்தில் மூன்று பாடல்களை இசையமைப்பாளர் ஸ்டெர்லின் நித்யா இசையமைத்துள்ளார்.பாடலாசிரியர்கள் மின்னூர் மகாதேவன் , பிரம்மன் ஆகிய இரு கவிஞர்கள் பாடல்கள் எழுதியுள்ளனர் .வேல்முருகன் ஒரு தத்துவ பாடல் ஒன்றை பாடியுள்ளார் .


"தப்பா யோசிக்காதீங்க..... நீங்க தப்பா யோசிக்காதீங்க

இது தப்பான கதை யல்ல.... இங்கு யாரும் தப்பான ஆள் இல்ல

அப்பாவி யாருமே இங்கில்லங்க ........"


தொழில்நுட்ப கலைஞர்கள்


எழுத்து - இயக்கம் - சுல்தான்ஸ்

ஒளிப்பதிவு - S.R. வெற்றி வேல்

இசை - ஸ்டெர்லின் நித்யா

தயாரிப்பு நிர்வாகம் - O.K. குமார்

மக்கள் தொடர்பு - செல்வரகு

இணை தயாரிப்பு - SK சித்திக்

தயாரிப்பாளர் - G. அனில்குமார்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in