Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

டிமான்ட்டி காலனி

டிமான்ட்டி காலனி,Demonty colony
அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் டிமான்ட்டி காலனி.
25 மே, 2015 - 11:18 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » டிமான்ட்டி காலனி

அருள்நிதி நடிப்பில் முற்றிலும் வித்தியாசமாக, மிரட்டலாய் வௌிவந்திருக்கும் பேய் படம் தான் டிமான்ட்டி காலனி!


நண்பர்கள் ஐந்து பேர் பெரிதாக வேலை வெட்டி இல்லாமல், சென்னை பட்டினப்பாக்கம் ஹவுசிங் போர்டில் அறை எடுத்து தங்கியிருக்கின்றனர். நால்வரில் பயந்த நண்பர் ஒருவரை பயமுறத்த வேண்டி மற்ற மூவரும், டிமான்டி காலனியில் உள்ள பேய் பங்களாவிற்கு அந்த நண்பரை அழைத்து செல்கின்றனர். அங்கு வௌ்ளைக்காரர்கள் காலத்தில் வாழ்ந்து அகால மரணம் அடைந்து, இறந்த பேய்களுடன் இவர்களுக்கு ஏற்படும் அனுபவமும், அங்கு கிடைக்கும் ஒரு விலை மதிப்பில்லா ஆபரணத்தால் இவர்கள் நால்வருக்கும் அறை திரும்பிய பின்பும் நடக்கும் அமானுஷிய விபரீதங்களும், விளையாட்டுகளும் தான் டிமான்ட்டி காலனி படம் மொத்தமும்!


ஆண்டாண்டு காலமாய் தன் பங்களாவிற்குள் அமைதியாக வாழ்ந்து வரும் டிமான்டி பேயை, அந்த ஆபரணத்தை தங்களது அறைக்கு எடுத்து வந்ததின் மூலம் கடுப்பேற்றி, கலாய்த்ததால் இவர்கள் நால்வருக்கும் நிகழும் கொடூரம் தான் படத்தின் உச்சகட்ட காட்சிகளாகும். அதை இதுவரை எந்த பேய் படத்திலும் சொல்லாத அளவிற்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், பிரமாண்டமாகவும், பிரமாதமாகவும், புத்தம் புதிய பயமுறுத்தும் கோணங்களில் படம்பிடித்து ரசிகர்களை மிரள செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆர்.அஜய் ஞானமுத்து.


அறிமுக இயக்குநர் கேட்டதை, அவர் கேட்டதற்கும் மேலாக மிரட்டலாக நடித்து மிரள செய்து, மிரண்டும் இருக்கிறார் சீனி எனும் பாத்திரத்தில் வரும் அருள்நிதி. அருள்நிதியின் நண்பர்களாக வந்து அவரைப்போலவே அகால மரணம் அடையும் ரமேஷ் திலக், ஷனத், அபிஷேக் ஜோசப் உள்ளிட்டவர்களும் கச்சிதம். ஹெலன், சிங்கம் புலி, ஆண்டிஜாஸ் கெனலனன், சாத்தையா, எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா, ரே... உள்ளிட்ட இன்னும் பலரும் பேய் படத்திற்கே உரிய இலக்கணம் மீறாமல் மிரட்டலாக நடித்து மிரட்டியிருக்கின்றனர்.


கதாநாயகியே இல்லாமல் துணிச்சலாக ஒரு கதையை தேர்வு செய்து பேயை மட்டுமே நம்பி நடித்து, ஜெயித்திருக்கும் அருள்நிதியின் துணிச்சல் பாராட்டுதலுக்குரியது.


அரவிந்த் சிங்கின் ஔிப்பதிவு ஆஹா அபாரம்! அபாய காட்சிகளில் ரசிகர்களை அய்யய்யோ என அலறவிட்டிருக்கிறார். இசையமைப்பாளர் கேபா - ஜெர்மியாவும் அவ்வாறே ரசிகர்களை அலற வைத்திருக்கிறார். படத்தொகுப்பாளர் புவன் சீனிவாசனின் படத்தொகுப்பும் பக்கா!


அறிமுக இயக்குநர் ஆர்.அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில், அருள்நிதியின் ஹைட்டுக்கும்-வெயிட்டுக்கும் ஏற்ற டிமான்ட்டி காலனி - ரசிகர்களிடத்தில் செம டிமான்ட்டை ஏற்படுத்தும்!


ஆக மொத்தத்தில், டிமான்ட்டி காலனி - த்ரில்லர் ரசிகர்களுக்கு டிபரண்ட் டெவில் காலனி



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

டிமான்ட்டி காலனி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in