ஆஷிஷ் வித்தியார்த்தி, கே கே மேனன், திஸ்கா சோப்ரா
டைரக்டர் : மணிஷ் குப்தா
தயாரிப்பாளர் : மோனிகா விமல் மலுகா
ஆருஷி தல்வார் கொலை சம்பவத்தை பிரதிபலிக்கும் விதமாக வெளிவந்துள்ள படம் ரஹஸ்யா. கே கே மேனன் மற்றும் திஸ்கா சோப்ரா நடித்துள்ள இந்த படம் குறித்து இனி காண்போம்.
18 வயது பெண்ணை சுற்றி, இந்த படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. ஆயிஷா மகாஜன் (சாக்ஷி செம்), தனது சொந்த வீட்டில் கொலையுண்டு கிடக்கிறார். அவளின் தந்தை சச்சின் மகாஜன் (ஆஷிஷ் வித்தியார்த்தி), இந்த கொலை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் சுனில் புரஸ்கார் ( கே கே மேனன்), ஆயிஷா கொலை குறித்த விசாரணையை மேற்கொண்டு, இந்த கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தருவதே, இந்த படத்தின் மீதிக்கதை.
சமீபத்தில் நாட்டையே பரபரப்பாக்கிற்கு உள்ளாக்கிய ஆருஷி தல்வார் கொலை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் டைரக்டர் மணிஷ் குப்தா, ஆருஷி தல்வார் சம்பவத்தை நன்றாக உள்வாங்கியுள்ளதோடு மட்டுமல்லாது, அதற்கு ஏற்றாற்போல பல்வேறு கதாபாத்திரங்களை படத்தில் சேர்த்து, படத்தின் முதல் காட்சியிலிருந்து, படத்தை சுவாரஸ்யமாக தர முயற்சித்துள்ளார். ஆனால், மணிஷின் முயற்சி ரசிகர்களிடம் பலிக்கவில்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது. சொசைட்டியில் முன்னணியில் உள்ள ஒரு முக்கியதஸ்தரின் மகள், மர்மமான முறையில் கொல்லப்படுகிறாள். இவளின் கொலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அவள் கொண்டிருந்த தகாத உறவு தான் முக்கிய காரணம் என்பது இறுதியாக கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த கொலையை, அவளின் பெற்றோரே செய்திருந்ததும் விசாரணையில் தெரியவருகிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்ல முனைந்திருக்கிறது ரஹஸ்யா படம்.
சி.பி.ஐ. இன்ஸ்பெக்டராக வரும் கே கே மேனன், நடிப்பில் பளிச்சிடுகிறார். படத்தின் முக்கிய கேரக்டரில், அவர் நடித்துள்ளார். சமபவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சச்சின் மகாஜனிடம் (ஆஷிஷ் வித்தியார்த்தி), அவர் விசாரணை நடத்தும் அணுகுமுறை புதுமையாக உள்ளது. ஆஷிஷ் வித்தியார்த்தியின் நடிப்பும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. எமோஷனல் காட்சிகளில், ஆஷிஷ் வித்தியார்த்தி, தனித்துவம் காட்டியுள்ளார். திஸ்கா சோப்ரா, நடிப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் இருந்தபோதிலும், அவர் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றே சொல்லலாம்.
காதல் கொலை சம்பவம் குறித்த படம் விரும்புபவர்கள், தாராளமாக இப்படத்தை பார்க்கலாம்.
மதிப்பீடு : 2.5/5