நகைச்சுவை கலையையும், காதலையும் மையமாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் "ஓஹோ" இதை பாய்ஸ் கம்பெனி தயாரி்ககிறது. கதையின் நாயகனாக "லக்கிஸ்டார்" அறிமுகமாகி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக செளந்தர்யா நடிக்கின்றார். இவர்களுடன் சாப்ளின் பாலு, போண்டாமணி, பெஞ்சமின், சுஸ்மிதா ஆகியோர் நடிக்கின்றனர்.
இசை : கடவுள் முருகன், ஒளிப்பதிவு : தினேஷ், நடனம் : ராம்தேவா
இத்திரைப்படத்தை எழுதி இயக்கும் பாலுதேவன் கூறுகையில்.... படத்தின் இறுதி்க்கட்ட படப்பிடிப்பு நடத்தி உள்ளோம், பாடல் காட்சிகளுக்காக பல்வேறு இடங்களில் தேர்வு செய்து அதில் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்ன மாங்கோடு என்ற இடத்தில்
" வாங்கோன்னா வாங்கோன்னா - இது
வங்கக்கடல் தான்
வலைவிரிச்சா கிடைச்சுடுமே
வஞ்சர மீனுத்தான்"
இந்த பாடல், தீவில் படமாக்கி உள்ளோம். இந்த சிறப்பான பாடல் காட்சிகளை எடுத்தபொழுது, மீனவக்குப்பம் இருந்ததால், அருகில் இருந்த மீனவ மக்களும், குப்பத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களும் பாடல்காட்சிகளில் இடம்பெற்றுள்ளனர். இந்த காட்சிகள், கடலில் தத்ரூபமாக எடுக்கப்பட்டது.
நாற்பது வயது வரை பணத்தையே குறிக்கோளாக இருந்தவர், அதற்கு பிறகு திருமண ஆசை வந்துவிடுகிறது. இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை வரன் தேட ஆரம்பிக்கிறார். அப்பொழுது எந்த பெண்ணும் அமையவில்லை. ஆனால், இறுதியாக ஒரு பெண் அவர் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். அந்தப் பெண்ணுக்கும், இவருக்கும் திருமணம் ஆனதா? இல்லையா? என்பதையே நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும் வகையில் படமாக்கியுள்ளோம்! என்று கூறியுள்ளார்.