Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஹவாய்ஜாதா (ஹிந்தி)

ஹவாய்ஜாதா (ஹிந்தி),Hawaizaada
  • ஹவாய்ஜாதா (ஹிந்தி)
  • ஆயுஷ்மான் குரானா
  • பல்லவி ஸ்ரதா
30 ஜன, 2015 - 19:20 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஹவாய்ஜாதா (ஹிந்தி)

தினமலர் விமர்சனம்


புதியவர் விபு புரி இயக்கத்தில், ஆயுஸ்மான் குரானா, மிதுன் மற்றும் பல்லவி ஷ்ரத்தா ஆகியோரது நடிப்பில் வௌியாகி இருக்கும் படம் தான் ஹவாய்ஜாதா. இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்று இனி பார்ப்போம்...


இந்தியாவில் விமானத்தை வடிவமைத்து உலகுக்கு முன் உதாரணமாக திகழ்ந்த விஞ்ஞானி ஷிவ்கர் தல்பேதேவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் தான் ஹவாய்ஜாதா. இப்படிப்பட்ட கதையம்சம் உள்ள படத்தை பாலிவுட்டின் மசாலா சமாச்சாரங்களை திணித்து கொடுத்திருக்கிறார் இயக்குநர். படத்தின் டிரைலரை பார்த்து படம் பார்க்க தூண்டிய உணர்வு, படத்தை பார்த்த பின்னர் ஏன்டா படத்தை பார்த்தோம் என்று எண்ண தோன்றும் அளவுக்கு தேவையில்லாத காட்சிகள், பாடல் என எல்லவாற்றையும் திணித்திருக்கிறார் இயக்குநர்.


விஞ்ஞானி ஷிவ்கர் தல்பேவாக வாழ முயற்சித்திருக்கிறார் ஆயுஸ்மான் குரானா, ஆனால் அதில் பாதி வெற்றி மட்டுமே வெற்றிருக்கிறார். இன்னும் கொஞ்சம் சிறப்பாக நடித்திருக்கலாம். ஆனால் உணர்ச்சிகரமாக காட்சிகளில் அருமையாக நடித்திருக்கிறார்.


சித்தாராவாக வரும் பல்லவி ஷ்ரத்தாவின் நடிப்பு கொஞ்சம் கூட எடுபடவில்லை. படத்தில் அவருக்கான காட்சி பெரிதாக இல்லாததால் அவரது நடிப்பு ரசிகர்களை கவரவில்லை. மிதுன் சக்ரபார்த்தி தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.


ஒரு நல்ல கதையை சிறப்பாக இயக்க தவறிவிட்டார் அறிமுக இயக்குநர் விபு பூரி. இன்டர்வெல்லுக்கு முன்னர் வரும் சில காட்சிகள், விமான முயற்சி தோல்வி அடைவது அதைதொடர்ந்து வரும் 20 நிமிட காட்சிகள் மட்டுமே இயக்குநருக்கு சல்யூட் சொல்ல வைக்கிறது. ஆனால் வலுகட்டாயமாக திணிக்கப்பட்ட பாடல்கள், காட்சிகள் மற்றும் பாலிவுட்டின் வழக்கமான மசாலாக்கள் எல்லாம் சேர்த்து ஒரு நல்ல படத்தை ''ச்ச்சீ'' என்று சொல்ல வைத்து ரசிகர்களையும் ஈர்க்க தவறிவிட்டது.


''ஹவாய்ஜாதா'' நல்ல கதையுள்ள படம் தான், ஆனாலும் யாரும் பார்க்க வேண்டாம் என சொல்ல வைக்கிறது.




ரேட்டிங் - 2/5



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in