குழந்தை இல்லாமல் தவம் இருந்து பெற்ற பிள்ளை ஒன்று, வீடடுக்குள்ளே பொத்தி பொத்தி வளர்த்த பெண் ஒன்று இவர்கள் ஏதோ சூழ்நிலையில் சந்தி்கிறார்கள். இருவரும் காதல் மழையில் நனைகிறார்கள். மிகுதி என்ன என்பதை காதல் ரசம் சொட்ட சொட்ட திகில் சம்பவத்துடன் உருவாகியுள்ள படம் தான் ஒத்தக்கால் மண்டபம் என்கிறார் இயக்குனர் வி.அகஸ்டின்
எஸ். ஆர். குட் மூவிஸ் சார்பில் எஸ்.ஆறுமுகம், குட் டே மூவிஸ் சார்பில் வினோஜ் தாமஸ் இணைந்து தயாரிக்கும் படம் இது. இப்படத்தில் இரணடு கதாநாயகர்களாக ஜெய்நாத், ஷான் நடிக்க நாயகிகளாக நூர்யா, தீபிகா காமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.