Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

வானவில் வாழ்க்கை

வானவில் வாழ்க்கை,Vanavil vazhkkai
  • வானவில் வாழ்க்கை
ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் முதல் படம்.
18 மார், 2015 - 15:03 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வானவில் வாழ்க்கை

திரைவிமர்சகர், இசையமைப்பாளர் என இனங்காணப்பட்ட ஜேம்ஸ் வசந்தன், தன்னை ஒரு கதாசிரியராகவும், திரைக்கதையாளராகவும், வசனகர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும், இயக்குநராகவும் காட்டிக்கொள்ள முயன்று, வழக்கமாக ஜெயித்த இசையமைப்பாளராகவும் வெற்றி கொள்ள முடியாமல் போயிருக்கும் படம் தான் வானவில் வாழ்க்கை!


கதைப்படி நாயகன், தன் அப்பாவின் டிரான்ஸ்பரால், தனது யு.ஜி. இறுதியாண்டு படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் படித்து வரும் டில்லி-ரிட்டர்ன் தமிழ் இளைஞன். நாயகி சென்னையில் இருக்கும் வேறு ஒரு கல்லூரியில் படிக்கும் யுவதி! இருவரும் கல்லூரி இசைக்குழு மூலம் இணைந்து இண்டர் காலேஜ் கலைவிழாக்கள், ஸ்டேட்லவல் - கல்லூரி இசை விழாக்களில் வெற்றி பெற்று, சென்னை பல்கலை கழகத்திற்கு பெருமை தேடித்தர, தங்களது இசை மாணவ நண்பர்கள் குழுவுடன் வட இந்தியா போகின்றனர். அதற்குள் ஹீரோவின் அப்பாவுக்கு மீண்டும் டிரான்ஸ்பர்! மெடலுடனும், காதலுடனும் திரும்பும் இருவரும், இசையில் இணைந்தது மாதிரி வாழ்க்கையிலும் இணைந்தனரா.? இல்லையா..? என்பது க்ளைமாக்ஸ்!


மைக் மோகன் காலத்து கதையை கையில் எடுத்து பாட்டு, பாட்டு என படம் முழுக்க பாட்டை திணித்து படுத்தி எடுத்து விடுகிறார் இயக்குநர் ஜேம்ஸ் வஸந்தன்! திருக்குறள், பாரதியார், பாரதிதாசனின் பாடல்கள் எல்லாம் எப்படி.? ஜேம்ஸ் வஸந்தனின் பாடல்கள் ஆயின என்பது புரியாத புதிர்! இப்பட பாடலாசிரியராக, அவர் தான் விளக்கம் வேண்டும்


ஜிதின், ஜோஸ் செல்வராஜ், ஜோனத்தான், சாய் சங்கர், கெஸான்டரா, ஜனனி ராஜன், ஷில்விஷாரோன், மாயா, ராதிகா ஜார்ஜ், கானா சிவா, பவித்ரன் உள்ளிட்ட இளைஞர் பட்டாளம் உற்சாகமாக படம் முழுக்க வளைய வருகிறது. ரசிகர்கள் தான் பாவம்!


ஆர்.கே.பிரதாப்பின் ஔிப்பதிவு ஓ.கே! சாபு ஜோசப்பின் படத்தொகுப்பும் சப் என்று இருக்கிறது.


மற்றபடி, ஸ்போர்ட்ஸ்க்கு என மாணவர்களுக்கு குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்பட்டு அதை தேர்வு மதிப்பெண்ணுடன் சேர்ப்பது மாதிரி, இசை - கலை இலக்கியங்களை உள்ளடக்கிய கல்ச்சுரல் மாணவர்களுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அதையும், அதில் சிறந்து விளங்கும் மாணவர்களது தேர்வு மதிப்பெண்களுடன் சேர்க்க வேண்டும், இசை மாதிரி கலைகளுக்கும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பி.ஏ., பி.எஸ்சி., மாதிரி டிகிரி படிப்பு வேண்டும்.... உள்ளிட்ட கோரிக்கை மெஸேஜ்க்களுக்காக வானவில் வாழ்க்கையை வாழ்த்தலாம்!


அதேநேரம், இசை சம்பந்தமான படம் எடுக்கிறேன் பேர் வழி... என களம் இறங்கி இருக்கும் ஜேம்ஸ் வஸந்தன், இதோ மீண்டும் ரிலீஸ் ஆகியிருக்கும் தெவிட்டாத இசைக்கதையை உள்ளடக்கிய சங்கராபரணம் மாதிரி படங்களை பார்த்துவிட்டு, இதுமாதிரி படங்களை எடுப்பது உத்தமம்!


மொத்தத்தில், ஜேம்ஸ் வஸந்தனுக்கு வானவில் வாழ்க்கை ஓ.கே.! தயாரிப்பாளருக்கும், ரசிகர்களுக்கும் வண்ணமில்லா வாழ்க்கையாக தெரிவது கொடுமை!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in