புதியவர்கள் இணைந்து வி என்ற படத்தை எடுக்கிறார்கள். இதில் ராகவ், சத்யதாஸ், ரிஷி, திவ்யன், ரினீஷ், ருதியா, அஸ்வினி, நிமா, சூர்யா, பில்ஜியா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இளங்கோ, கலைவாணன் இசை அமைக்கிறார்கள், அணில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபேஷ்குமார் தயாரிக்கிறார்.
"படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று தனியாக யாரும் கிடையாது. 5 நண்பர்கள், தங்கள் காதலியுடன் ஒரு சுற்றுலா செல்கிறார்கள். கூடவே அவர்களது பெற்றோர்களும் செல்கிறார்கள். அந்த நெடுஞ்சாலை பயணத்தில் அவர்கள் சந்திக்கும் திகில் அனுபவங்கள் தான் படம். மற்ற திகில் படங்களிலிருந்து இது வித்தியாசமாக இருக்கும்" என்கிறார் இயக்குனர் டாவன்சி.