Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சூட்டிங் ஸ்பாட் »

களம்

களம்,Kalam
  • களம்
  • பிற நடிகர்கள்: ஸ்ரீனி, அம்ஜெத்
  • பிற நடிகைகள்: லட்சுமி பிரியா
ஜீவா சங்கரிடம் உதவியாளராக இருந்த ராஜ் இயக்குகிறார்.
29 ஏப், 2016 - 15:18 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » களம்

தினமலர் விமர்சனம்


அம்ஜத் கான், லட்சுமிபிரியா, ஸ்ரீனிவாசன், நாசர், மதுசூதனன் ராவ், பூஜா, கனிஸ்ருதி, பேபி ஹியா... உள்ளிட்ட தெரிந்த முகங்களும், தெரியாத முகங்களும் நடிக்க, பி.கே.சந்திரன் தயாரிப்பில், ராபர்ட்ராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திக், திக், திக்... திகில் படம் தான் களம். அது தமிழ் சினிமாவின் வழக்கமான திக் திக் திக் திகட்டலா? இல்லை... மெய்யாலுமே மிரட்டலா..? எனப் பார்ப்போம்...


பூட்டிக்கிடக்கும் பெரும் பங்களாக்களை எல்லாம் ஆட்டையப் போட்டு தனதாக்கிக் கொள்ளும் பெரும் தாதா மதுசூதனன் ராவ். திருமணம் முடித்து அமெரிக்கா வாசியான தன் ஒற்றை பிள்ளையின் குடும்பத்திற்காக ஒரு பாழடைந்த ஜமீன் பங்களாவை ஆட்டையப் போட்டு தன் பாணியில் புதுப்பித்து இந்தியா வரும் தன் மகன் குடும்பத்திற்கு கொடுத்து விட்டு மனைவியுடன் வடக்கே நொய்டாவிற்கு ஒரு வேலையாக செல்கிறார்.


அந்த வீட்டில் குடியேறிய மதுசூதனின் வாரிசு அம்ஜத்தையும், லட்சுமி பிரியாவையும், கூடவே மதுசூதனனையும் அந்த வீட்டில் பரம்பரை பரம்பரையாக குடியிருக்கும் ஜமீன் பேய்கள் சாகடித்ததா? சரி போகட்டும் என விட்டதா..? என்பது தான் களம் படத்தின் கதைக் களம்! இதில் உண்மையில் ஜமீனின் ஆவிகள், பேய்கள் தான் தாதா மதுசூதனன் அண்ட் சன்ஸை பிடித்து ஆட்டியதா.? அல்லது அந்த தாதாவால் பாதிக்கப்பட்ட யாரும் திட்டம் போட்டு கொட்டமடித்தனரா..? என்னும் க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸ் மட்டும் வித்தியாசம், விறுவிறுப்பு.


அம்ஜத் கான், லட்சுமிபிரியா, ஸ்ரீனிவாசன், நாசர், மதுசூதனன் ராவ், பூஜா, கனிஸ்ருதி, பேபி ஹியா... உள்ளிட்ட தெரிந்த முகங்களும், தெரியாத முகங்களும் பிரமாதமாக நடித்திருக்கின்றனர். அதிலும் கொஞ்ச நேரமே மேஜிக் நிபுணராக வந்தாலும் நாசர் நவரசத்தையும் காட்டி வசீகரிக்கிறார். தாதா மதுசூதனன் ராவ் வழக்கமாக வில்லனின் வறட்டு கௌரவத்தால் நாயகர்களிடம் அடி வாங்குவார். இந்தப் படத்தில் பேய்களிடம் அடி வாங்கி படுத்த படுக்கையாகிறார் பாவம்.


எல்லோரையும் காட்டிலும் அந்த ஜமீன் பங்களா பிரமாதமாக மிளிர்ந்திருக்கிறது முகேஷ் ஜி.யின் அலட்டல் இல்லா மிரட்டல் ஓளிப்பதிவில். பேய், திகில் படங்களுக்கே உரிய ப்ரகாஷ் நீக்கியின் அதிரடி இசை, பிரபாகரனின் பாதிபக்கா, மீதி பாடாவதி படத்தொகுப்பு, சுபீஷ் சந்திரனின் கதை, திரைக்கதை, வசனத்தில, க்ளைமாக்ஸ் திருப்பம் மட்டுமே புதுமை எனும் நிலை. எல்லாம் இருந்தும் ராபர்ட் ராஜின் இயக்கத்தில் வித்தியாசமாக எதுவும் இல்லாதது குறை.


அந்தக் குறையே பெருங்குறையாக தெரிவது "களத்"தின் பெரும் பலவீனம்! மற்றபடி, "களம் திரைப்படத்தில் பெரிதாக இல்லை வேறு "பலம்!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

களம் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in