Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

உயிரே உயிரே

உயிரே உயிரே,Uyire Uyire
01 ஏப், 2016 - 18:53 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » உயிரே உயிரே

தினமலர் விமர்சனம்


மாஜி, பிரபல நாயகி ஜெயபிரதாவின் வாரிசு சித்து, தன் தாயின் தயாரிப்பில் ஹீரோவாக, ஹன்சிகா மோத்வானியுடன் ஜோடி போட்டிருக்கும் படம் தான் உயிரே உயிரே.


சித்துவை பெரிதாக ரிஸ்க் எடுக்க வைக்காது, தெலுங்கில் ஹிட் அடித்த இஷ்க் படத்தின் ரீ-மேக்காக உருவாகியிருக்கும், இப்படத்தை விஷால் நடித்த சத்யம் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கியிருக்கிறார். ஈராஸ் இண்டர்நேனஷனல் உலகம் முழுதும் இன்று, வெளியிட்டிருக்கிறது. உயிரே உயிரே உயரே உயரே பறக்குமா.? பார்ப்போம்...


அக்காவை காதலிப்பதாக காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டவனை நையப்புடைக்கும் நாயகர், எதிர்பாராமல் தான் புடைத்தவனின் தங்கையையே, இன்னாரது தங்கை எனத் தெரியாமல் உருகி, உருகி காதலிக்கிறார். அந்த காதல் அடாவடி அண்ணனின் எதிர்ப்பைத்தாண்டி, ஹீரோவின் நற்பண்பால் ஹீரோயினின் குடும்பத்து மீதான அவரது அன்பால் எப்படி.? சுமூகமாக கல்யாணத்தில் முடிகிறது..? என்பது தான் "உயிரே உயிரே" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.


சித்து, அவரது அம்மா மாதிரியே அழகாக இருக்கிறார், நடிக்கிறார். ஆனால், இவரது தத்துபித்து தமிழ் தான் ரசிகனை கொள்கிறது. பாவம்! கமர்ஷியல் படம்தானே இது? ஏதோ விருதுகளை குறிவைக்கும் கலைப் படம் மாதிரி மனிதர், தனக்கு இல்லாத தமிழ் குரல் வளத்தில் சொந்தக் குரலில் பேச வேண்டிய அவசியம் என்ன? என்பதற்கு இயக்குனர் தான் பதில் சொல்ல வேண்டும்.


ஹன்சிகா, இப்படத்தில் வரும் அவர் பற்றிய டயலாக் மாதிரியே வெண்ணெயில் செய்த பொம்மையாட்டம் அழகாக வந்து போகிறார்.


ஹன்சிகாவின் அடாவடி அண்ணனாக சாயாசிங்கின் டார்ச்சர் காதலனாக அஜெய், நாயகர் சித்துவின் அக்காவாக மன்மத ராசா சாயாசிங், மீரா கிருஷ்ணன், உமா பத்மநாபன், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் கச்சிதம்.


சித்துவின் நண்பர் ஜெகன், வில்லன் அஜெய்யின் நண்பர் ஸ்ரீநாத் இருவரும் அதிகப்படியாய் கடிக்கின்றனர்.


அனூப் ரூபன்ஸ் இசையில் பாடல்களிலும் பின்னணியிலும் அதிரடி தெலுங்கு வாடை! ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு அதிலும், கோவா பகுதி பதிவு படத்திற்கு பெரும்பலம். சுராஜ் கவி.யின் படத்தொகுப்பு ஒ.கே., விஜய் பாலாஜியின் வசனம் டபுள் ஒ.கே!


இஷ்க் தெலுங்கு பட ரீ-மேக் என்பதற்காக பாடல்களில் கூட தெலுங்கு வாடையே வீசுவதும், திதி சமயத்தில் தான் கோரை புல்லில் மோதிரம் போடுவார்கள்.. இதில் ஒரு சீனில் நாயகன் நாயகிக்கு அவ்வாறு, மோதிரம் அணிவிப்பதும் ஏர்போர்ட்டில் ஹீரோ சித்து, நாயகியின் அண்ணனது ஜீப் பெட்ரோல் டேங்கில் சிறுநீர் கழித்து வண்டியை ஸ்டார்ட் செய்ய விடாமல் செய்வதும், அதை அஜெய் உறிஞ்சி பார்த்து, துப்பி முகம் சுளிப்பதும், நாயகன் நாயகி காதலை வலுப்படுத்தவே, மும்பை - டூ- சென்னை பிளைட்., புளோட்டிங் பாதிப்பால் கோவா திருப்பி விடப்படுவதும், முன்பின் அறிமுகம் இல்லாமல் முகம் சுளிக்க வைக்கும்படி நடந்து கொள்ளும் ஹீரோ, கூப்பிட்ட இடத்திற்கெல்லாம் கோவாவில் ஹீரோயின் சுற்றுவதும், விரும்பிய, வளையல்களுக்காக ஹீரோவை ஹீரோயின் புருஷன் என ஒப்புக் கொள்வதும், ஆங்காங்கே ஆரம்ப பேஸ்கட் பால் காட்சியில் தொடங்கி படம் முழுக்க அள்ளிவிடப்பட்டிருக்கும் அருவறுக்கத்தக்க டபுள் மீனிங் டயலாக்குகள் உள்ளிட்டவையும்... சினிமா டிக்காகவும், டிராஜிடியாகவும், சற்றே நம்ப முடியாத கடியாகவும் இருக்கிறது. இது போன்ற எண்ணற்ற சிறு, பெருங்குறைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஏ.ஆர்.ராஜசேகரின் இயக்கத்தில் உயிரேஉயிரே - உயரே உயரே!


ஆனால், புத்திசாலி ரசிகர்கள் இவற்றை கணக்கில் கொண்டால் உயிரே உயிரே - உயரே உயரே பறப்பது சற்றே கடினம்!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in