ஜி.கே.அறிவுச்சோலை திரைபட நிறுவனமும், அப்போலைன் ரியல்டர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் புதிய படம் ஆனந்த மழை. இப்படத்தை சுப.தமிழ்வாணன் இயக்குகிறார். ஜெய் ஆனந்த், சுப.தமிழ்வாணன், சிவா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கும் இப்படத்தில், புதுமுக கதாநாயகிகளாக விகீதா, சரோஜா தேவி நடிக்கிறார்கள். இவர்களுடன் வடிவுக்கரசி, சிங்கமுத்து, ரமேஷ், விஸ்வநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும், சாதிப்பதற்காக எப்பவுமே சந்தோஷமாக இருக்கும் கவிஞரின் அறை தோழர்களாக, வாழ்க்கையில் விரக்தியடைந்த இரண்டு இளைஞர்கள் வந்து சேர்கிறார்கள். கவிஞரை சந்தித்த பின் புத்துணர்ச்சி பெற்று, புரட்சிகரமான சிந்தனைகளுடன் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். அப்படித் தொடங்கும் புதிய வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பது தான் ஆனந்த மழை படத்தின் கதை.
இப்படத்தில் களஞ்சியம் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.