Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

மைந்தன்

மைந்தன்,Mainthan
  • மைந்தன்
  • பிற நடிகர்கள்: சி.குமரேசன்
  • பிற நடிகைகள்: புன்னகைப்பூ கீதா
  • இயக்குனர்: , சி.குமரசேன்
22 செப், 2014 - 12:10 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மைந்தன்

தினமலர் விமர்சனம்


நடிகர் விஜய்யின் தலைவா படத்தில் தமிழ் பசங்க... எனத் தொடங்கும் ராப் பாடலை பாடிய மலேசிய யுவன்யுவதிகளுடன் பிரபல தமிழ்பட அதிபர் புன்னகை பூ கீதா இணைந்து நடித்து வெளிவந்திருக்கும் வித்தியாசமும் விறுவிறுப்பும் நிரம்பிய திரைப்படம் தான் "மைந்தன்".

கார்ரேஸ் பிரியரான ஹீரோவிற்கும், அநாதை குழந்தைகள் ஆஸ்ரமத்தில் அப்பா ஸ்தானத்தில் இருக்கும் வில்லனுக்குமிடையில், குழந்தைகளை கொத்தடிமைகளாக விற்கும் விவகாரத்தில் ஏற்படும் முட்டலும் மோதலும் அதனால் அவருக்கு கிடைக்கும் புதிய காதலியும், இழந்த ஃபேவரைட் காரும் ஒரு கதை என்றால், கார் ரேஸரான ஹீரோ, தன் ரேஸ் பிரியத்தால் இழக்கும் முதல் காதலியும், உயிருக்கு உயிரான நட்பும் அதனால் ஏற்படும் குடிபழக்கமும் மைந்தன் படத்தின் மற்றொரு ப்ளாஷ்பேக் ஸ்டோரி! இந்த இரண்டு கதைகளையும் இணைத்து பக்கா இன்ட்ரஸ்டிங்காக முழுக்க முழுக்க மலேசியாவில் மைந்தன் படம் பண்ணியிருக்கும் புதிய இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் சி.கே எனும் சி.குமரேசனின் துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும்.

இயக்குநரும் தயாப்பாளருமான சி.கே., ஷைலா, ஹனுமன், கீதாதர்,ராபிட்மேக், ஷீஷாய், உதயாதர், டார்க்கீ...உள்ளிட்ட ஒட்டு மொத்த நட்சத்திரங்களும் பாத்திரமறிந்து மின்னியிருக்கின்றனர். அதிலும் கார் ரேஸராக வந்து காதலியையும் நன்பரையும் இழந்து, குடிக்கு அடிமையாகி பின் தன்னிடம் அடைக்கலம் தேடி வந்த பொடியனையும், அவன் சகாக்களையும் காபந்து செய்ய வேண்டி அடிமை பழக்கத்தில் இருந்து மீண்ட ஆக்ஷனில் குதிக்கும் சி.கேவும் அவரது ஜோடிகள் ஷைலாவும்கீதாவும் கூடுதலாக மின்னியிருக்கின்றனர் என்றால் மிகையல்ல!

மேன்ஷர்கிங், தேவ்நேசன், எம்.எஸ்.பிரேம்நாத், ரஜினிகாந்த், ரூபிந்தர் நாயக், அபுபேக்கர் சித்திக், வனிதா கிருஷ்ணமூர்த்தி, செல்வம், பி.சாரதா, காயத்ரி சு-லின்-பிள்ளை, சாஹீல் ஹமீத், புவனேஷ்வரன் உள்ளிட்ட இந்தியன் மற்றும் மலேசியன் டெக்னீஷியன்களின் ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, கலை, இயக்கம், கிராபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் இத்யாதி, இத்யாதிகள் சி.குமரேசனின் எழுத்து இயக்கத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

புன்னகைபூ கீதா தவிர பிறமுகங்கள் அத்தனையும் புதுமுகங்கள். அதுவும் என்.ஆர்.ஐ., தமிழ் முகங்கள்..., குழந்தை கடத்தல் வில்லனை கூண்டோடு அழித்த ஹீரோ, காதலியை கொன்ற கார் ரேஸ் கயவர்களை கண்டு கொள்ளாது திராட்டில்...விடுவது உள்ளிட்ட ஒரு சில மேஜர் குறைகளை மைனராக எடுத்துக் கொண்டால், ''மைந்தன் - ஃபைன் தான்!''



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in