விளம்பர பட இயக்குனர் ராஜ் தயாரித்து, நடித்து, இயக்கும் படம் கடவுள் பாதி மிருகம் பாதி. ஆர்யா தயாரித்து வெளிவராமல் இருக்கும் படித்துறை படத்தில் ஹீரோவாக நடித்த அபிஷேக் இன்னொரு ஹீரோ, மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஸ்வேதா விஜய் ஹீரோயின். படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது.
படத்தை பற்றி இயக்குனர் கம் தயாரிப்பாளர் ராஜ் சொல்லும் தகவல்கள்: "இது ஒரு ரோடு சேசிங் திரில்லர். சென்னையிலிருந்து ஐதராபாத் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கதை நடக்கிறது. முதல் நாள் இரவில் தொடங்கி மறுநாள் இரவு வரைக்கும் ஒரே நாளில் நடக்கும் கதை. ஒரு காதலர்கள் காரில் பயணிக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து முன்றாவதாக ஒருவன் பயணிக்கிறான். அவர் யார், எதற்கு பின் தொடர்கிறான் என்று கதையை ஒரு வரியில் சொல்லிவிட முடியும். ஆனால் அதை சொல்கிற விதம்தான் படத்தின் ஸ்பெஷல். பெரிய அளவிலான விஷூவல் ட்ரீட்மெண்ட் இருக்கும், இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்" என்கிறார் ராஜ்.