Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

கதை திரைக்கதை வசனம் இயக்கம்

கதை திரைக்கதை வசனம் இயக்கம்,Kadhai ThiraiKadhai Vasanam Iyakam
  • கதை திரைக்கதை வசனம் இயக்கம்
  • சந்தோஷ்
  • அகிலா கிஷோர்
  • இயக்குனர்: ரா.பார்த்திபன்
22 ஆக, 2014 - 10:24 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கதை திரைக்கதை வசனம் இயக்கம்

தினமலர் விமர்சனம்


இயக்குநர், நடிகர் ஆர்.பார்த்திபன், இராதா கிருஷ்ணன் பார்த்திபனாக பெயரில் "பெரிய மாற்றம் செய்து கொண்ட பின் பெரிதாக கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி, சின்னதாக நடித்து(வந்து போகும்) இருக்கும் படம் தான் ""கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம்!

இந்தப்படத்திற்கு தலைப்பையும், கருத்துக்களையும் தந்து உதவிய படைப்பாளிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் நன்றி., திருட்டு விசிடியிலயும், இண்டர்நெட்டிலும் திருட்டு தனமா படம் பார்த்து அடுத்தவங்க உழைப்பை சுரண்டாமல் தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களையும் வரவேற்கிறோம், உள்ளிட்ட வாசகங்களை டைட்டில் கார்டில் முன்னதாக போட்டு "கதை திரைக்கதை வசனம் இயக்கம் எனும் டைட்டிலை மிளிர விட்டதும், ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன் லிஸ்ட்டுகளை ஒளிர செய்து எழுத்தும், இயக்கமும் எனும் கார்டுக்கு பதிலாக இந்தப்படத்தின் தலைப்பாய்... இராதா கிருஷ்ணன் பார்த்திபன் எனும் இடத்தில் தொடங்கும் பார்த்திபன் "டச் படம் முழுக்க பரவி, விரவி கிடப்பது தான் "க.தி.வ.இ படத்தின் பெரும் பலமும், பலவீனமும்!

முற்றிலும் புதுமுகங்களான ஏழெட்டு யுவன், யுவதிகளுடன் ஆர்யாவும், அமலாபாலும் முக்கியபாத்திரத்தில் நடிக்க, அவர்களை காட்டிலும் முக்கிய பாத்திரத்தில் தம்பி ராமைய்யாவும் நடித்திருக்கிறார்! விஷால், விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ், டாப்சி உள்ளிட்ட நட்சத்திரங்களை கெஸ்ட் ரோலிலும், விமல், பரத், ஸ்ரீகாந்த், சாந்தனு, இனியா, ஐஸ்வர்யா உள்ளிட்டவர்களை ஒரு புரமோஷன் பாடலுக்கும் ஆங்காங்கே டைரக்ஷ்ன் "டச் ஆக புதுமை எனும் பெயரில் தானும் தலைகாட்டி மொத்த படத்தையும், ‛‛A Tribute to 100 years of Indian Cinema என பப்ளிசிட்டி செய்து ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று நாட்டுபற்றுடன் படத்தை திரைக்கு கொண்டு வந்திருக்கும் இராதாகிருஷ்ணன் பார்த்திபனுக்கும், அவரது பயாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸூக்கும் ஓர் ராயல் சல்யூட் அடிக்கலாம்! அதற்காக "கதை திரைக்கதை வசனம் இயக்கம் எனும் டைட்டிலுக்கு கீழேயே, ‛‛A Film without Story என புதுமையாக எழுதியிருக்கும் பார்த்திபனுக்கு, என்னதான் புதுமை என்றாலும் எத்தனை துணிச்சல்?

சரி அப்படி என்ன தான் கதை? கதையே இல்லை என பார்த்திபனே கூறும்போது "க.தி.வ.இ படத்தில்...? என்ன என பகுத்தெறிந்து பார்த்தோமென்றால்... கோடம்பாக்கத்தில் சினிமா கனவுகளுடன் போராடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை போராட்டங்கள் தான் இப்படத்தின் கரு, கதை, களம் எல்லாம்! அதிலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் சம்சாரி ஆன ஓர் இளம் இயக்குநரின் வீட்டுக்கு ‛உள்ளே வெளியே போராட்டத்தையும், அவருக்கு உதவியும், உபந்திரமும் பண்ணும் சுற்றம், நட்பு மற்றும் சொந்த பந்தத்தையும் கட்டம் கட்டி தன் பாணி கிண்டல், கேலி, நக்கல், நையாண்டியுடன் சீன் பை சீன் செதுக்கியிருக்கிறார் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

பார்த்திபனின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு இயக்குநர் வாய்ப்பு தேடி அலையும் இளைஞராக நடித்திருக்கும் புதுமுகம் தமிழில் தொடங்கி அவரது காதல் மனைவியாக வரும் புதுமுகம், இயக்குநராக ஆக துடிக்கும் இணை, துணை இயக்குநர்களாக வலம் வரும் இளைஞி, இளைஞர்கள் மற்றும் 2 பொண்டாட்டி, 28 வயது மகள், 40 வருட அனுபவத்துடன் 58 வயதான துணை இணை இயக்குநராகவே போராட்டகரமான வாழ்க்கை நடத்தும் தம்பி ராமைய்யா வரை சகலரும், பலே, பலே சொல்லும் அளவிற்கு பளிச்சிட்டிருக்கின்றனர். இவர்களை காட்டிலும் கெஸ்ட்ரோலில் வந்து பெஸ்ட் பர்பாமென்ஸ் கொடுத்திருக்கின்றனர் பிரபல சீனியர் கதாசிரியர் கலைஞானம், தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன் தொடங்கி ஆர்யா, அமலாபால் வரை, ஆக பிரமாதம் எனும் அளவில் நடித்திருக்கின்றனர்.

அதிலும் ஓப்பனிங் சீனில் சுனாமியால் மாட்டியபடி தவிக்கும் விஷால், வேலையில்லா இளைஞராக, ""பழைய சாதம், பெரிசா? பிரியாணி பெரிசா? என பெற்ற தாயிடம் கேள்விகேட்டு பிரியாணி ஒரு மணிநேரத்தில் செஞ்சிடுவாங்க, பழையது ரெடியாக ஒன்றரை நாள் வேண்டும், அதனால் பழைய சாதம் தான் பெரிசு என்றபடி... சீலிங்பேனை கழட்டிபோகும் விஜய் சேதுபதி, ஈழத்தில் குண்டடிப்பட்டு கிடக்கும் நிலையிலும் கற்பை காபந்து செய்து கொள்ள வீணை கம்பியால் கழுத்தை அறுத்துக் கொண்டு மாண்டுபோகும் டாப்சி, பிரம்மா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்களும் "க.தி.வ.இ படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.

எங்கேயும் எப்போதும் சத்யாவின் பின்னணி இசை, ஷரத், விஜய் ஆண்டனி, எஸ்.எஸ்.தமன், அல்போன்ஸ் ஜோஸ் உள்ளிட்டவர்களின் பாடல்கள் இசை, ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தும், இயக்குநர் பார்த்திபனின் "டச் சில இடங்களில் ஓவர் டோஸாகி விடுவது தான் "கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் பலமும், பலவீனமும்!

குழப்பமான கதைகளமும், காட்சிபடுத்தலும் வித்தியாசம் என்ற பெயரில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், முன்பாதியைவிட விறுவிறுப்பாக படமாக்கபட்டிருக்க வேண்டிய பின்பாதி படம் அவ்வாறு படமாக்கப்படாமல் இருப்பது, பின்னால் வருவதை முன்கூட்டியே அறியும் "இன்துசிஸ் இத்யாதி இத்யாதி விவகாரங்கள், பிரிவுகள், சோகங்கள், முடிவை சரியாக சொல்ல முடியாத க்ளைமாக்ஸ் என சற்றே போரடிக்கிறது.

சினிமாக்காரர்களுக்கு சட்டென புரியும் இக்கதை, வெகுஜனங்களுக்கும் புரியும் வகையில் இன்னும் தெளிவாக சொல்லப்பட்டிருந்ததென்றால், "கதை திரைக்கதை வசனம் இயக்கம் மொத்தபடமும், சினிமா விழாக்களில் ஜொலிக்கும் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போலவே இருந்திருக்கும்! இன்னும் இனித்திருக்கும்!!










---------------------------------------------------------------



குமுதம் சினி விமர்சனம்





கோடம்பாக்கத்தில் சினிமா கனவுகளுடன் போராடும் இளைஞர்களின் வலி தான் கதை. ஆனால் இதில் கதையே இல்லை என்கிறாரே இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்பவர்களுக்கு, அது அவருக்கு; ரசிகர்களுக்கு அல்ல என்பதுதான் உண்மை.


காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஓர் இளம் இயக்குநரின் வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் போராட்டம்தான் மையக்கரு. அவரது உதவி இயக்குநர்கள், போட்டோகிராபர், நண்பர்கள் குழு கதை டிஸ்கஷன் என்ற பெயரில் செய்யும் உதவியும், உபத்திரவங்களும் கோடம்பாக்க உதவி இயக்குநர்களின் ரியல் லைஃபின் பிரதிபலிப்பு.


பார்த்திபனின் எண்ணத்தை பிரதிபலிக்கிறார் புதுமுக ஹீரோ சந்தோஷ். எப்போதும் சினிமா சிந்தனையாகவே இருப்பதால் மனைவியுடன் ஊடல் கொள்ளும் இடங்களில் நடிக்கிறார். நாயகி அகிலா கிஷோர் ஜொலிக்கிறார். கோபமும் ஏக்கமும் கலந்த மிரட்டல். கணவனைப் பிரியும்போது அவர் போடும் சண்டை யதார்த்தம்.


ஹீரோவுடன் இணை, துணை இயக்குநர்களாக வரும் இளைஞர்கள் கச்சிதம். 58 வயதாகியும் துணை இயக்குநராகவே போராட்ட வாழ்க்கை வாழும் தம்பிராமையா படத்தின் முக்கிய பலம். இரண்டு பொண்டாட்டி வாழ்க்கையில் அவர் படும் அவஸ்தை டச்சிங். குறும்படம் எடுக்கும் குரங்குகளா? என்ற அவரது வாய்ஸ் கொஞ்சம் ஓவர்.


ஹீரோ சொல்லும் கதையில் காதலர்களாக வரும் ஆர்யாஅமலாபால் (கொஞ்சம் சலிப்பு), சுனாமியில் சிக்கும் விஷால், வேலையில்லாத இளைஞனாக விஜய் சேதுபதி, கற்பை காக்க உயிர்விடும் டாப்ஸி, பிரகாஷ்ராஜ், கலைஞானம் என்று கெஸ்ட்ரோல்களை கையாண்டிருப்பது புதிய பரிமாணம்.


பின்னணி இசை, பாடல்கள் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் இவைதான் படத்தின் கூடுதல் பலம். இப்பல்லாம் படம் பார்க்கிற இடத்துல கூட ஆள் செட் பண்ணி வச்சிருக்காங்கப்பா! வசனங்கள் டாப்


கதையைத் திருடி அல்லது டிவிடி பார்த்து கதை பண்ணும் இயக்குநர்களை தனக்கே உரிய கேலி, கிண்டல், நக்கலால் வாருவாரு என்று வாரி இருப்பது துணிச்சல். மற்றபடி, முன்பாதி விறுவிறுப்பு, பின்பாதியில் மிஸ்ஸிங். இந்தூசிஸ் விவகாரம், ஒருதலைக்காதல், தற்கொலை, ஹீரோஹீரோயின் பிரிவு, சரியாகச் சொல்லமுடியாத க்ளைமாக்ஸ் (இதைத்தான் கதை இல்லை என்கிறார் இயக்குநர்) என்று சலிப்புத்தட்டும் இடங்கள் ஏராளம். என்றாலும் வெகுஜனமங்களுக்குப் புரியுமா என்பதைப் பற்றி கவலைப்படாமல் முடிவை ரசிகர்களிடையே விட்டு விட்ட 50:50 துணிச்சல் தனிரகம்.


க.தி.வ.இ: கதையில்லாத கதை


குமுதம் ரேட்டிங்: ஓகே



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in