Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

ஸக்கர் (ஆங்கிலம்)

ஸக்கர் (ஆங்கிலம்),Sucker
  • ஸக்கர் (ஆங்கிலம்)
  • நடிகர்: மைக்கேல் மானசேரி
  • நடிகை:கிம்பெர்லி கேட்ஸ், ஜோர்டன் டிராவிலின்
  • இயக்குனர்: மைக்கேல் மானசேரி
05 அக், 2013 - 12:31 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஸக்கர் (ஆங்கிலம்)

நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


ஹீரோ கல்பாக்கம், கூடங்குளம் மாதிரி ஒரு அணுமின் நிலையத்துல ஒர்க் பண்றாரு. ஆனா அவருக்கு கிடைக்க வேண்டிய புரொமோஷன் எதுவும் கிடைக்கலை. திடீர்னு ஒரு நாள் அவரை வேலையை விட்டுத்தூக்கிடறாங்க.அவர் லோன்ல எடுத்த கார் தவணை கட்டாததால சீஸ் பண்ணிடறாங்க. அவருக்கு மிக மோசமான நாள், ஆள் கடுப்பாகி கம்பெனியை விட்டு வெளில நொந்து போய் வரும்போது ஒரு ஹோட்டல்ல அவரோட மனைவி இன்னொரு ஆள் கூட சந்தோஷமா இருப்பதைப்பார்த்துடுறாரு. வாழ்க்கையே வெறுத்துப்போய் சோகமா ரோட்ல நடந்து போய்ட்டிருக்கும்போது ஒரு கார் வந்து அவரைத்தாக்க இருந்து சடன் பிரேக் போட்டு நிறுத்துது.

அதுல இருந்த 2 பேரும் அவரை சரக்கு அடிக்க பார்க்கு கூட்டிட்டுப்போறாங்க. அவங்க கொசு பற்றி ஒரு விபரீத ஆராய்ச்சி பண்ணும் விஞ்ஞானிகள். ஹீரோவை, பரிசோதனை எலி ஆக்க ஐடியா பண்ணிடறாங்க. அந்த பிராசஸ்ல ஹீரோ பயங்கரமான தோற்றம் உள்ள கொசு மனிதனா உருமாறிடறாரு. அவருக்கு இப்போ பழி வாங்கும் குணம் வந்துடுது, கம்பெனில தன்னை வஞ்சித்தவங்க, தன் மனைவியை கரெக்ட் பண்ணின ஆள் இப்படி வரிசையா போட்டுத்தள்ள ஆரம்பிக்கறார்.

இவருக்கு ஒரு முன்னாள் காதலி. அவர் கூட இப்போ நெருக்கமா ஆகிடறாரு. பொண்ணு புருஷனுக்கு செஞ்சா அது துரோகம், புருஷன் தன் பொண்டாட்டிக்கு துரோகம் செஞ்சா அது கோ இன்சிடெண்ட். சபாஷ் ஆணாதிக்க ஹாலிவுட்.  இந்த கொசு மனிதனை போலீஸ் எப்படி பிடிக்குது ? அந்த மோசடி விஞ்ஞானிகள் என்ன ஆனாங்க என்பது மிச்ச மீதிக்கதை

ஹீரோ மைக்கேல் மானசேரி, தான் படத்தோட இயக்குநர் கம் திரைக்கதை ஆசிரியர். அதனால கதை முழுக்க தன்னைச்சுற்றியே நடக்கணும்னு பிளான் பண்ணி திரைக்கதை அமைச்சிருக்கார். இவர் தன் சொந்த முகத்தோட மொத்தமே 20 நிமிஷம் தான் இருக்கார், மீதி ஒரு மணி நேரம் கொடூர மாஸ்க் மேக்கப் தான். அந்த மேக்கப் சகிக்கல. ஸ்பைடர் மேன் , பேட் மேன் மாதிரி கொஞ்சம் கண்ணியமா இருந்திருக்கலாம் .

ஹீரோயின்கள் 2 பேரு. கிம்பெர்லி கேட்ஸ், ஜோர்டன் டிராவிலின். ஒண்ணும் பெருசா சொல்ற அளவுக்கு இல்லை. வில்லன் சயிண்ட்டிஸ்ட் கேரக்டர்ல வர்றவர் ஹீரோவை விட பர்சனாலிட்டியா இருக்கார் . அவருக்கு இன்னும் வாய்ப்பு குடுத்திருக்கலாம்.


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. போஸ்டர் டிசைன் ஏதோ சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்சன் த்ரில்லர் மாதிரியே நல்லா டிசைன் பண்ணியது.
 
2. ரொம்ப சாதாரண கதையா இருந்தாலும் சி செண்ட்டர் ரசிகர்கள் ரசிக்கும்படி போர் அடிக்காம திரைக்கதை அமைச்சது.
 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. வில்லன் எல்லாப்படத்திலும் வர்ற மாதிரி “ அவனை உயிரோட பிடிக்கணும்”னு எதுக்கு சொல்லிட்டு இருக்கார்? ஆராய்ச்சி ஃபெய்லியர், இனி அடுத்த ஆராய்ச்சியை அடுத்த ஆள் வெச்சு பண்ணப்போறார். எதுக்கு இவர் உயிரோட வேணும்?

2. போலீஸ் விசாரணைல அந்த விஞ்ஞானிகள் மேல சந்தேகம் வந்தும் எந்த செக்கும் அவங்களுக்கு வைக்கப்படலையே ஏன்?

3. தன்னோட உதவியாளன், ஹீரோவின் காதலி 2 பேரையும் ஒரே டைம்ல வில்லன் ஊசி போட்டு ஆராய்ச்சிக்கு ரெடி பண்ண முயற்சி பண்றாரு. பி ஏ வை ஊசி போட்டு மயக்கம் ஆக்கிடறாரு . ஹீரோயினை மட்டும் எதுக்கு கட்டில்ல கட்டி வெச்சு அந்த பில்டப் கொடுத்து ஹீரோ வரும் வரை டைம் வேஸ்ட் பண்றாரு ?


மனம் கவர்ந்த வசனங்கள்

1. யோசிச்சுத்தான் சொல்றீங்களா? நான் யோசிக்காம எதையும் செய்ய மாட்டேன், செஞ்ச பின் யோசிச்சுட்டு இருக்க மாட்டேன்.

2. பொண்ணுங்க பெரும்பாலும் துரோகிகள், எல்லாப்பொண்ணுங்களும் அப்படின்-னு சொல்லிட முடியாது , ஆனா மேக்சிமம் லேடீஸ் அப்படித்தான்

3. அவன் வாழ்க்கைல ஏன் விளையாடறே? என் வாழ்க்கைல நான் வளரணுமே?

4. விட்டில் பூச்சிகள் எல்லாம் ஏன் விளக்கைத்தேடி ஓடுது தெரியுமா? வெளிச்சத்துக்கு வரணும், ஸ்டார் ஆகணும்னு வாழ்க்கைல எல்லாருக்கும் ஆசை. அதான்.


சி.பி.கமெண்ட் - தியேட்டர்ல பார்க்கும் அளவு ஒர்த் இல்லை. ஹெச்.பி.ஓ சேனல்ல எப்படியும் போடுவாங்க, அப்போ பார்த்துக்கலாம் . இது ஒரு ஏ படம் , அதனால தியேட்டர்ல பெண்கள் போய்ப்பார்க்க முடியாது.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in