Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

பனிவிழும் நிலவு

பனிவிழும் நிலவு,Panivizhum Nilavu
  • பனிவிழும் நிலவு
  • நடிகர்: ஹிருதய்
  • ஈடன்
  • இயக்குனர்: கெளசிக்
02 ஏப், 2014 - 17:08 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பனிவிழும் நிலவு

தினமலர் விமர்சனம்


சின்னத்திரை நடிகர் கவுசிக்கின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இண்டாவது படம், மணிரத்னத்தின் 'பாம்பே' படத்தில் குழந்தை நட்சத்திரமாக மின்னிய ஹிருதய் கதாநாயகர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம், இசைமேதை எல்.வைத்தியநாதனின் வாரிசு எல்.வி.கணேசன் இசையில் வெளிவந்திருக்கும் இன்னுமொரு படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் படம்தான் ''பனிவிழும் நிலவு!''


கல்லூரியில் படிக்கும் நாயகர் ஹிருதய்க்கும், நாயகி ஈடனுக்கும் காதல்! வசதியான வீட்டுப்பெண் ஈடன், தன் கெஸ்ட்ஹவுஸ் காலியாக இருக்கிறது... சும்மா டேட்டிங் போகலாம் என ஹீரோவை அழைத்துப்போய், அங்கு மற்ற நண்பர்களையும் அழைத்து ஹீரோவை மொக்க பண்ணுகிறார். நாயகிக்கு, நாயகரின் 'பர்த்டே'யில் எல்லா நண்பர்களையும் அழைத்து சர்ப்ரைஸாக கொண்டாட வேண்டுமென்பது நோக்கம், அதை புரிந்து கொள்ளாத நாயகரோ தன்னை நாயகி, ஆசை காட்டி மோசம் செய்துவிட்டதாக கோபித்துக் கொண்டு மற்ற நண்பர்களின் முன் அவமானத்தில் கூனி குறுகி அந்த இடத்தை காலி செய்கிறார். கூடவே கல்லூரியையும் மாற்றிக் கொண்டு வேறு இடம் போகும் ஹீரோ, அதன்பின் நண்பர் ஒருவரின் வெளியூர் திருமணத்தில் மீண்டும் சந்திக்கும் காதலர்கள் நண்பர்களின் முயற்சியால் மீண்டும் இணைந்தார்களா, இல்லையா என்பது க்ளைமாக்ஸ்!


கலர்புல் காலேஜ் பையனாக ஹிருதய் கச்சிதம்! நாயகி ஈடன், த்ரிஷா சாயலில் அழகாக இருக்கிறார். நடிப்பும், இளமை துடிப்பும் டபுள் ஓ.கே.!


வெண்ணிறஆடை மூர்த்தி, பாண்டியராஜன், கோவை சரளா உள்ளிட்டோர் வழக்கம்போலவே பல இடங்களில் கடித்து சில இடங்களில் சிரிக்க வைக்கின்றனர்!


எல்.வி.கணேசனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மேலும் மெருகு சேர்கிறது. டி.எஸ்.வாசனின் ஒளிப்பதிவும் குறையின்றி நிறைவாகவே இருக்கிறது!


டி.வி. சீரியல்கள் பாணியில் தலையை சுற்றி மூக்கை தொட முயன்றிருக்கும் இயக்குநர் கவுசிக் அதை தவிர்த்திருந்தார் என்றால் 'பனி விழும் நிலவு' மெய்யாலுமே குளிர்ச்சியாக இருந்திருக்கும்! ஆனாலும் அந்த மாதிரி காட்சிகளும் இருக்கிறது... எனும் எதிர்பார்ப்பையும் திணித்திருப்பதால், ''பனிவிழும் நிலவு'' - சோடைபோகவும் இல்லை!


ஆகமொத்தத்தில், ''பனிவிழும் நிலவு'' - ஒளிர்கிறது - குளிரவில்லை!!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in