Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

கன்னியும் காளையும் செம காதல்

கன்னியும் காளையும் செம காதல்,Kanniyum Kaalaiyum Sema Kadhal
  • கன்னியும் காளையும் செம காதல்
  • கிரண்
  • புதுமுகம்
  • இயக்குனர்: வி.சி.வடிவுடையான்
23 ஆக, 2014 - 15:20 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » கன்னியும் காளையும் செம காதல்

சிங்கம் சினிமா சார்பில் இயக்குனர் வி.சி.வடிவுடையான் தயாரித்து இயக்கிய 'கன்னியும் காளையும்' செம காதல் திரைப்படம் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் கரண், தருண்கோபி, திருப்தா, கஞ்சா கருப்பு, கனல் கண்ணன் மற்றும் பலர் நடித்திருக்க, மிக பெரிய பொருட் செலவில் தயாரான இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை புதுமையான முறையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

அனைத்து தொலைக்காட்சிகள், எப்.எம்.,மற்றும் இணையதளங்களில் ஒரே நேரங்களில் பாடல்கள் மற்றும் ட்ரெயிலரை வெளியிடுகிறார் இயக்குனர். இதன் படப்பிடிப்பு, காஷ்மீர், குற்றாலம், மைசூர், ஊட்டி, மதுரை, தேனி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. இதைப்பற்றி இயக்குனர் ஏ.ஊ.வடிவுடையான் கூறியதாவது, எனது முதல் படமான 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தில் கொலகாரா என்ற பாடல் எல்லோராலும் நல்ல வடிவேற்பை பெற்றது. 'கன்னியும் காளையும் செம காதல்' படத்திலும் பாடல்களை மிக அழகாக படம் எடுத்திருக்கிறேன். கரனுக்கு இது 75வது படம் என்பதால் நடிப்பில் புதிய சகாப்தம் படைத்துள்ளார். இப்படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியான சில நாட்களிலேயே அறுபது லட்சம் பேர் பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளுக்கு ஸ்பெஷலாக 5 கேமராக்களை வரவழைத்து 10 நாட்கள் தொடர்ந்து கனல்கண்ணன் மிக அற்புதமாக படமாக்கி கொடுத்திருக்கிறார்.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in