எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் | பாடகர் ஹரிஹரனுக்கு லதா மங்கேஷ்கர் விருது! | இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் ஆர்.வி.உதயகுமார்! | முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவி! | பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம்பு...! | மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்! | சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான் | விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்? |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழகத்தின் அடுத்த தலைமுறை பாடகர்களை தேடும் சரிகமப சாலஞ்ச் 2012 நிகழ்ச்சி, இறுதிச் சுற்றை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இசையமைப்பாளர் பரத்வாஜ், உன்னிமேனன், ரைஹானா, ஹரிஷ் ராகவேந்திரா, பிரசாந்தினி, மோகன் வைத்தியா உள்ளிட்டவர்களை நடுவர்களாக கொண்டு நடைபெற்று வரும் இப்போட்டி நிகழ்ச்சியில், தற்போது தமிழகம் முழுவதிலுமிருந்து தலை சிறந்த 7 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். இந்த 7 போட்டியாளர்களும் கோவை மாநகரில் அமைந்துள்ள பன் ரிபப்ளிக் மாலிலும், 16-ம் தேதி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யு மாலிலும் கலந்து கொள்கிறார்கள். தேர்வாகும் ஐந்து போட்டியாளர்களும் நேரடியாக மக்களின் முன்னிலையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர். தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இசை உலகின் ஜாம்பவான்கள் முன்னிலையில் விரைவில் நடைபெறும். இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் போட்டியாளர் ஒருவருக்கு சினிமாவில் பின்னணி பாடும் வாய்ப்பு நிச்சயம். பரபரப்பான தருணத்தை அடைந்திருக்கும் ‘சரிகமப’ நிகழ்ச்சி, வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.