விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! | அரசியலில் கலக்க வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா! | கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் |
ஜெயா டிவியில் சினிமா என்ற பெயரில் புதிய நிகழ்ச்சியை ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. எப்போதுமே சினிமா பொதுமக்களின் விருப்ப சாதனம். குறிப்பிட்ட ஒரு படம் பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் சினிமாவே பிடிக்காது என்பவர்கள் மிகச் சிலரே. மக்களுடன் இரண்டறக் கலந்து விட்ட சினிமா பற்றிய செய்திகளை நேயர்களுக்கு தருவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
பல்வேறு பகுதிகளை கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகளின் சுய விவரங்கள், பழம்பெரும் நடிகர்கள் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள், தற்போது படப்பிடிப்பில் இருக்கும் புதிய திரைப்படங்கள் பற்றி இதுவரை அறிந்திராத செய்திகள், காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள் என அத்தனையையும் தொகுத்து தருவதே இந்த நிகழ்ச்சி. சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்களின் எண்ண ஓட்டங்களும் பதிவுகளும், திரைக்கு வரவிருக்கும் ஒரு புதிய படத்தின் பிரத்தியேகமான காட்சிகளும் அந்தப் படக்குழுவினரின் அனுபவங்களும் என சினிமா பற்றிய பல்வேறு செய்திகளும் கூட இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிப்பது சிறப்பு. சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
டியர் ஜெயா டிவி,
கடந்த வருஷம் உங்கள் ஜெயா டிவி சேனல்ஸ் எல்லாம் ஒரே நாளில் நிறுத்தி விட்டீர்கள். இங்கே ஆப்பிரிக்காவில் ப்ரீ டு ஏர் சேனலில் உங்கள் ப்ரோக்ராம்ஸ் எல்லாம் கண்டு சந்தோசமாக இருந்த எங்களுக்கு பேரிடி.
தற்போது கலைஞர் டிவி இல் 6 சேனல்கள் ப்ரீயாக கிடைகிறது. மேலும் செய்திகள் சேனல் உங்கள் கவர்மென்ட் பற்றி குறை கூறுவதையே குறியாக உள்ளது. உங்கள் சேனல் நிறுத்தியதிலிருந்து உண்மை செய்தி தெரிவதில்லை. மீண்டும் உங்கள் சேனல் 2 அதே பிரெகோன்சி யில் வந்தால் paying facilities இல்லாத ஆப்ரிக்காவில் உங்கள் உண்மை நிகழ்சிகளை கண்டு மகிழ்வோம். மீண்டும் உங்கள் நிகழ்சிகளை Free டு Air இல் காண ஆவலாக இருக்கிறோம். வாழ்க உங்கள் சேவை வளர்க உங்கள் தொண்டு தமிழர்களுக்கு.