அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தில் நவம்பர் 10ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக "கேட்ஸ் சூப்பர் சிங்கர் 2012" இறுதிப் போட்டி ஆயிரக்கணக்கான அமெரிக்க வாழ் தமிழர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பிரபலத் திரைப்படப் பின்னணிப் பாடகர்களான மஹதி, ஹரீஷ் ராகவேந்திரா, விஜய் டிவி புகழ் சத்ய பிரகாஷ் மூவரும் நடுவர்களாகக் கலந்து கொண்டு, போட்டிகளில் சிறப்பாகப் பாடியவர்களைத் தேர்வு செய்து "கேட்ஸ் சூப்பர் சிங்கர் 2012" பட்டங்களை வழங்கி சிறப்பித்தனர். பின்னர், சஹானா ட்ரீம்ஸ் குழுவினருடன் இணைந்து மஹதி, ஹரீஷ் ராகவேந்திரா, சத்ய பிரகாஷ் தங்களின் இனிய குரலால் நள்ளிரவு வரை தொடர்ந்து வழங்கிய இசை மழையை மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் ரசித்து மகிழ்ந்தனர்.