நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
எம் டிவியில் புகழ்மிக்க இசை நிகழ்ச்சியில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்று பாடவுள்ளார். எம்.டிவி பிரபலங்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இசை, நாட்டியம் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை வைத்து சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகிறது. எம்.டிவியின் இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது ஆகும். ஏற்கனவே ஒரு சீஸன் இசை நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியது. தற்போது இசை நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனை தொடங்க உள்ளது.
மியூசிக் ஷோ இரண்டாவது சீஸனில் பிரபல இசைக் கலைஞர்களுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் கலந்து கொண்டு பாடுகிறார். இதுபற்றி நிகழ்ச்சி தயாரிப்பாளர் அளித்துள்ள பேட்டியில், இந்த முறை இசை உலகில் முன்னணியில் உள்ளவர்களை வைத்து இந்த நிகழ்ச்சியை தயாரிக்க திட்டமிட்டோம். இந்நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரகுமானும் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியின் மிகப்பெரிய சொத்து அவர்தான். இந்த நிகழ்ச்சி தொடரில் லக்கி அலி, கைலாஷ் கேர் ஆகியோரும் பங்கேற்கின்றனர். இருவரும் இசை உலகில் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்கள். டிரம் கலைஞர் ரஞ்சித் பரோம் மற்றும் பிறதுறை கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர். நவம்பர் மாதம் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங், அடுத்த வாரம் தொடங்குகிறது, என்று கூறியுள்ளார்.