Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சின்னத்திரை »

மக்கள் டி.வி.யிலும் கேம் ஷோ...!

New game show in Makkal T.V.,இந்தியா முழுக்க எல்லா மொழி சேனல்களிலும் கேம் ஷோ நிகழ்ச்சிகள் களை கட்ட ஆரம்பித்து விட்டன. தமிழ்நாட்டிலும் கூட நிறைய தமிழ் டி.வி.களில் கேம் ஷோ நிகழ்ச்சிகள் நடந்தேறி வருகிறது. இப்போது அந்த போட்டியில் மக்கள் டி.வி.யும் களம் இறங்கி இருக்கிறது. மக்கள் டி.வி.யில் புதிதாக விளையாடு வாகை சூடு என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிப்பரப்பாக இருக்கிறது. ஒவ்வொரு போட்டியும் 1 நிமிட நேரத்துக்குள் முடிந்துவிடும். இந்த ஒரு நிமிடத்துக்குள் செய்து முடித்தால் வெற்றி பெற முடியும். இல்லாவிட்டால் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுவெளிகளில் வரும் பார்வையாளர்களே இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள். வெற்றி பெறுவோருக்கு ஏகப்பட்ட பரிசுகளையும் தருகிறார்கள். இந்நிகழ்ச்சி ஞாயிற்றுகிழமை பிற்பகல் 1மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.

Tags »
Makkal T.V, மக்கள் டி.வி.,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (1)

மக்கள் ரசிகன் - chennai,இந்தியா
2012-06-12 12:55:57 Report Abuse
 மக்கள் ரசிகன் கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை சரியா போகலே.. அதான் கேம் ஷோ ஸ்டார்ட் பண்ணிட்டாங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in