ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன். பல திரைப்பட பாடல்களையும் பாடியுள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடியுள்ளார், அவரது கச்சேரிகள் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி இருக்கிறது. முதன் முறையாக தற்போது ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
அவ்னி சினிமேக்ஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கும் தொடர் நந்தினி, ராஜ்கபூர் இயக்கி வருகிறார். தினாக இசை அமைக்கிறார். மாளவிகா வேல்ஸ், நித்யா ராம், ராகுல், சச்சு, ராணி கவிதா உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த தொடரில் நவராத்திரியை ஒட்டி ஒரு சிறப்பு பகுதியை இணைத்திருக்கிறார்கள். இதுகுறித்து இயக்குனர் ராஜ்கபூர் கூறியதாவது:
நந்தினி வீட்டில் வைக்கப்படும் கொலுவில் இருக்கும் பொம்மைகள் 9 நாளும் 9 கதைகள் சொல்கிறது. அந்த கதை மெயின் கதையோடு தொடர்புடையதாக இருக்கும். அதோடு நவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது, அதன் மகத்துவம் ஆகியவையும் சொல்லப்படும். இதில் பாடகி சுதா ரகுநாதன் சிறப்பு தோற்றத்தில் இந்த எபிசோட்களில் நடிக்கிறார். ஒரு பாடலும் பாடுகிறார். இதற்காக பிரமாண்ட நவராத்திரி கொலு செட் போட்டு திரைப்படத்துக்கு நிகராக படமாக்கி வருகிறோம் என்றார்.