'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. 'மெட்ராஸ், கபாலி' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரித்விகா வெற்றியாளராக தேர்வாகி 50 லட்ச ரூபாய் பரிசை வென்றார். அவருக்கு 1 கோடியே 60 லட்சம் வாக்குகள் கிடைத்ததாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
நேற்றைய இறுதிப் போட்டி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு 12 மணி வரையிலும் ஒளிபரப்பானது. இந்த சீசன் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்ட நடனம், விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சி நடிகர்கள் கலந்து கொண்ட நகைச்சுவை நிகழ்ச்சி, யாஷிகா ஆனந்த் நடனம், இந்த சீசன் போட்டியாளர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்ட கேள்வி, பதில் நிகழ்வு என நிகழ்ச்சியின் நேரத்தைக் கூட்டிக் கொண்டே போனார்கள்.
சிறப்பு நிகழ்வாக கடந்த சீசனின் வெற்றியாளரான ஆரவ், பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து நேற்று இறுதிப் போட்டியில் இருந்த ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய மூவரில் விஜயலட்சுமியை 'எவிக்ட்' செய்து வெளியே கூட்டிக் கொண்டு சென்றார்.
சிறப்பு விருந்தினராக கடந்த சீசனின் பரபரப்பு போட்டியாளர் ஓவியா கலந்து கொண்டார். அவர் கமல்ஹாசனுடன் சிறிது நேரம் உரையாடி, கமல்ஹாசன் பற்றிய குறும்பட ஒளிபரப்புப் பற்றிய அறிவிப்பு செய்தார். அப்போது பேசிய ஓவியா, ஆரவ்வுடன் ஆரோக்கியமான ரிலேஷன்ஷிப் இருப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த சீசனின் ஓவியா ஆர்மி போல இந்த சீசனில் எந்தவொரு ஆர்மியும் பெரிதாகப் பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.