மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
எஸ்.எஸ்.மியூசிக் தொகுப்பாளினியாக இருந்து நடிகை ஆனவர் பூஜா ராமச்சந்திரன். காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அமலாபாலின் தோழியாக நடித்தார். அதன் பிறகு நண்பன், பீட்சா, காஞ்சனா 2ம் பாகம், உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். தற்போது அவர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா கலக்கியதை போன்று இப்போது தெலுங்கு பிக்பாஸ் 2வில் பூஜா கலக்குகிறார். நேர்மையான, அப்பாவித்தனமாக பேச்சு, நடத்தை, எதையும் பளிச்சென்று முகத்துக்கு நேராக சொல்லிவிடும் துணிச்சல் என அப்படியே ஓவியாவை எதிரொலிக்கிறார். இப்போது அவருக்கு தெலுங்கில் பெரிய ரசிகர் வட்டாரம் உருவாகி இருக்கிறது. தொகுப்பாளர் நானியும் ஒவ்வொரு வாரமும் பூஜாவை புகழ்ந்து தள்ளுகிறார். பூஜாதான் டைட்டில் வெல்வார் என்று இப்போதே கணித்துச் சொல்கிறார்கள்.