இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கேரளாவில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் ஸ்ரீ தனம். 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற தொடர். தற்போது தமிழில் பொண்ணுக்கு தங்க மனசு என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் வருகிற திங்கள் கிழமை முதல் (ஆகஸ்ட் 20) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த தொடர் மூலம் மலையாள சின்னத்திரை நடிகை ராதிகா, தமிழுக்கு வருகிறார். இவர்கள் தவிர அஸ்வின், சிரிஷா நடிக்கிறார்கள். மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவு செய்கிறார், ஹரிசரன் இயக்குகிறார். இது வரதட்சணை கொடுமை பற்றிய தொடர்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த திவ்யா, பணக்கார வீட்டு பையன் பிரசாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டு, மாமியார் வீட்டிற்கு வாழப்போகிறாள். ஆனால் பணத்தாசை பிடித்த மாமியார் சேதுலட்சுமி, திவ்யாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார். கணவன் ஆதரவுடன் திவ்யா, மாமியாரை எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதை. திவ்யாவாக ராதிகா நடிக்கிறார், பிரசாந்தாக அஸ்வின் நடிக்கிறார். வில்லி சேதுலட்சுமியாக சிரிஷா நடிக்கிறார்.