மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சின்னத்திரை வட்டாரத்தில் விஷால் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் விஷாலாட்சி. விஜய் டி.வியில் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் பின்னர் செய்தி வாசிப்பாளர், ராசிபலன் அறிவிப்பாளர், சினிமா விமர்சகர், தொகுப்பாளர் என பயணித்தார். ஐ.டி கம்பெனியில் உயர் பொறுப்பில் இருந்து கொண்டே சின்னத்திரையிலும் பணியாற்றினார். கம்பெனியின் உத்தரவின் பேரில் லண்டன் கிளையில் பணியாற்ற சென்று விட்டார். கடந்த 3 வருடமாக லண்டனில் பணியாற்றியவர் இப்போது நாடு திரும்பியிருக்கிறார்.
அதே நிறுவனத்தின் சென்னை கிளையில் வேலை பார்த்துக் கொண்டே நண்பர்களுடன் இணைந்து இயற்கை அழகு சாதன பொருட்கள் விற்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். மீண்டும் சின்னத்திரையில் முகம் காட்ட தயாராகி வருகிறார். "சீரியல்களில் நடிக்கும் எண்ணம் இல்லை. நல்ல நிகழ்ச்சி தொகுப்பாளர் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சின்னத்திரைக்கு வருவேன்" என்கிறார் விஷாலாட்சி.