இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர நிகழ்ச்சி கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ். இது சிறுவர்களிடையே இருக்கும் காமெடி திறமையை வெளிக் கொண்டு வரும் நிகழ்ச்சி. இதன் முதல் சீசன் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சி அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்தது. தற்போது இதன் இரண்டாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இதில் கலந்து கொள்பவர்களுக்கான தேர்வு வருகிற 24ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடக்கிறது. சென்னை வடபழனி சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள அரங்கில் நடக்கும் இந்த தேர்வில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கலந்து கொள்ளலாம். தங்களிடம் உள்ள திறமைகளை நடுவர்கள் முன் வெளிப்படுத்தி தேர்வு பெறலாம். காலை 9 மணி முதல் இந்த தேர்வு நடக்கிறது.