'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் டிவியில் கமல் நடத்தி வரும் பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அதிகப்படியான பரபரப்பு நிகழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள். அதன்காரணமாகவே இந்த முறை சற்று விவகாரமான நபர்களையும் உள்ளே இழுத்துப்போட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக, நடிகர் தாடி பாலாஜியும், அவர் மனைவி நித்யாவும் இந்த நிகழ்ச்சிக்குள் வந்திருப்பதால் மோதல் வெடிக்கும் என்ற தெரிகிறது. காரணம், திரைக்கு வெளியில் இருந்தபோது அவர்களின் குடும்ப சண்டை பலமுறை காவல் நிலையம் வரை சென்றிருக்கிறது.
பிக்பாஸ் துவங்கி மூன்று நாட்கள் ஆன நிலையில், "பொறியலில் வெங்காயம் வேண்டும் என்று தாடி பாலாஜி சொல்கிறார். அதற்கு அவர் மனைவி நித்யா, வெங்காயம் தேவை இல்லை" என்கிறார். இப்படியாக கிச்சனில் அவர்களின் மோதலுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ள புரமோ தற்போது வெளியாகியிருக்கிறது.
அவர்களின் இந்த மோதலைப் பார்த்து மும்தாஜ் தலையிட்டு, உங்க பர்சனல, பிக்பாஸ் வீட்டுக்குள்ள வச்சிக்காதீங்க. இதனால மத்தவங்களுக்கு பிரச்சினையாக இருக்கும் என்று சொல்லி அவர்களை அமைதிப்படுத்துவது போன்று அந்த புரமோ வெளியாகியுள்ளது.