பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் டி.வி., நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை வல்லமை தாராயோ, கொல கொலயா முந்திரிக்கா மூணே மூணு வார்த்தை போன்ற படங்களை இயக்கிய மதுமிதா இயக்கினார்.
இப்போது நடந்து வரும் சீசன் 2 நிகழ்ச்சியை 4 தமிழ் இயக்குனர்கள் இயக்குகிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை உள்ள பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை இயக்கி, எடிட் செய்கிறவர் ராஜ்குமார். இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளை ஏற்கெனவே இயக்கியவர். கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படத்தை இயக்கியவர்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கமல்ஹாசன் வரும் எபிசோட்களை இயக்குகிறவர் நெல்சன் திலிப்குமார். நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர். இதுதவிர எழுத்தாளர் மற்றும் இயக்குனரான சுகா, கமலுக்கு உதவியாளராக பணியாற்றுகிறார்.
இந்த மூன்று இயக்குனர்களையும் ஒருங்கிணைக்கும் முதன்மை இயக்குனர் கமல்ஹாசன்.
நிகழ்ச்சியை என்டமோல்ஷைன் என்ற நிறுவனம் ஒருங்கிணைக்கிறது. இதில் ஹாலந்து நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியாற்றுகிறார்கள்.