ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
கோலங்கள் சீரியலின் மூலம் புகழ்பெற்றவர் ஸ்ரீவித்யா. 7 வயதில் நடிக்க வந்தவர் 30 வருடங்களாக நடித்தார். பல சீரியல்களில் நடித்த பிறகு திருமணத்துக்கு பிரேக் விட்டார். சிறிய இடைவெளிக்கு பிறகு சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் சீரியல் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். இடையில் நந்தா உள்பட சில படங்களிலும் நடித்தார்.
இப்போது நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர பிசினசில் இறங்கி விட்டார். கிளவுட் கிச்சன் என்ற நிறுவனத்தை நடத்துகிறார். இது சென்னையில் தங்கியிருக்கும் பேச்சிலர்களுக்கு நல்ல சுவையான சாப்பாடு செய்து தரும் நிறுவனம். மெனுவை சொன்னால் அவர்களை தேடி அந்த உணவு வரும். வெளிநாட்டில் பிரபலமான இந்த முறையை சென்னையில் நடத்துகிறார் ஸ்ரீவித்யா. ஒரு சீரியல் இயக்கும் ஆசையிலும் இருக்கிறார் ஸ்ரீவித்யா.