Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ரமணியம்மாள் புறக்கணிக்கப்பட்டாரா? - சர்ச்சை

02 மே, 2018 - 13:18 IST
எழுத்தின் அளவு:
Did-Ramaniammal-avoided?

ஜீ தமிழ் சேனல் நடத்திய சரிகமப நிகழ்ச்சியல் தொடக்கம் முதல் நட்சத்திர பாடகியாக இருந்தவர் ரமணியம்மாள். 60 வயதை கடந்த ரமணியம்மாள் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தவர். அவரை தேடி கண்டுபிடித்து மேடையேற்றியது ஜீ தமிழ். ரமணியம்மாள் பாட்டுக்கு தனி ரசிகர்களே உருவானார்கள். அவர் பாடத் தொடங்கினால் கைதட்டல் காதை பிளக்கும். சேனல்காரர்களும் அவரை வெளிநாட்டுக்கெல்லாம் அழைத்துச் சென்று தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

ரமணியம்மாள் இறுதி சுற்றுவரை வந்தார். டைட்டில் வின்னர் அவர்தான் என்று நிகழ்ச்சியை பார்த்த ஒவ்வொருவரும் கணித்தார்கள். ஆனால் போட்டியின் முடிவில் கேரளாவைச் சேர்ந்த வர்ஷா டைட்டில் வென்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 40 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. 60 வயதுக்கு மேல் நமக்கு இந்த அளவிற்கான புகழும், பணமும் கிடைத்ததே பெரிது என்று ரமணியம்மாள் கருதினாலும் அவரது ரசிர்கள் பட்டாளம் விடுவதாக இல்லை.

"நடுவர்களின் மதிப்பெண்கள், நிகழ்ச்சியின்போது நேயர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையிலே டைட்டில் வின்னர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் நேயர்களின் அதிக வாக்குகளை பெற்றவர் ரமணியம்மாள் தான். அதுவரை ரமணியம்மாளுக்கு மதிப்பெண்களை அள்ளிப்போட்ட நடுவர்கள் இறுதிபோட்டியில் அவருக்கு மதிப்பெண்களை ஏன் குறைக்க வேண்டும். நிஜமாகவே வெற்றி பெற்றது ரமணியம்மாள் தான்" என்று நெட்டிசன்கள் கருத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

"வர்ஷா முறைப்படி சங்கீதம் படித்த புரபசனல் பாடகி. ஆனால் ரமணியம்மாள் எந்த சங்கீத பின்புலமும் இல்லாத சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். அவரது குடும்ப சூழல், வாழ்க்கை சூழல், வயது இவற்றையும் நடுவர்கள் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்" என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பிரச்னைக்கு சேனல் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Advertisement
சினிமாவிலிருந்து சீரியலுக்கு வந்த அனன்யாசினிமாவிலிருந்து சீரியலுக்கு வந்த ... சரிகமப 2வது சீசன்: 6ந் தேதி தொடங்குகிறது சரிகமப 2வது சீசன்: 6ந் தேதி ...


வாசகர் கருத்து (3)

11 மே, 2018 - 18:59 Report Abuse
JosephJohn ஏன் பதில் சொல்ல வேண்டும். அவனுக drp தான் முக்கியம்.
Rate this:
Shanu - Mumbai,இந்தியா
03 மே, 2018 - 20:00 Report Abuse
Shanu ஜீ தமிழ் டிவியில் ரமணியம்மாள், விஜய் டிவியில் செந்தில் ராஜலக்ஷ்மி என்று இருக்கிறார்கள். இவர்களின் பாடல்கள் ஒரே டோனில் இருக்கும். விஜய் டிவியில் செந்தில் ராஜலக்ஷ்மி முதலில் பாடியதை கேட்கும் பொது ஓகே என்று இருந்தது. பின்னர் இரிடேட் ஆகி விட்டது. ஒரே தொனி ஒரே கையசைப்பு. இவர்களுக்கு டைட்டில் வின்னர் என்று கொடுப்பது தவறு. டைட்டில் வின்னர் என்றால், அவர்கள் எல்லா வகை பாடல்களையும் முதன்மையாக பாடி இருக்க வேண்டும். இங்கு கிராமத்திலிருந்து வந்தவர்கள் என்று இரக்க பட்டு பரிசு கொடுக்க கூடாது. முறைப்படி சங்கீதம் கற்று எல்லா பாடல்களையும் திறம்பட பாடுபவர்கள் திறமையை மதிக்காதது போல் ஆகி விடும். போட்டி என்கிற போது ஏழைகள் என்று இரக்க பட கூடாது.
Rate this:
gg -  ( Posted via: Dinamalar Android App )
02 மே, 2018 - 13:29 Report Abuse
gg ada muttal pasangala..andha varshat ponnu avlo azhaga mistake illama andha kashtamana song ah paadichu..ramanaiammal naan aanaiyittal Padala neraya mistake oda paadichu..epdi da avanga winner aaga mudiyum..ipdi pesiyedha vijay tv la sangeetham ae theriyama kevalama padna preethika va win panna vechinga..talent ah paarunga..varumai jaadhi Ellam Aprama paathukala..always deserved ppl shud win all the format of competitions..grow up guyz
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in