ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நெல்லையை சேர்ந்த இமான் அண்ணாச்சி, சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். சின்ன சின்ன காமெடி கேரக்டரில் நடித்தவருக்கு, திருடன் போலீஸ் படம் திருப்பத்தை கொடுத்தது. தற்போது சிறிய பட்ஜெட் படங்களில் சோலோ காமெடியனாகவும், பெரிய பட்ஜெட் படங்களில் காமெடியன்களில் ஒருவராகவும் நடித்து வருகிறார். அவர் நடத்தி வந்த குழந்தைகள் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதும் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது நேத்ரா, பொதுநலன் கருதி, டிராபிக் ராமசாமி, இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன், வேங்கட சுப்பிரமணியம் மைக் டெஸ்ட் 123, ராஜாவும் 4 கூஜாவும் போன்ற சிறு பட்ஜெட் படங்களில் சோலோ காமெடியனாக நடித்து வருகிறார். களவாணி 2ம் பாகம், சாமி 2ம் பாகம் படங்களில் காமெடியன்களில் ஒருவராக நடித்து வருகிறார். அவர் நடத்தி வந்த குழந்தைகள் நிகழ்ச்சியின் 2வது சீசன் தொடங்கலாம் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். என்றாலும் அதை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் சினிமாவிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.