இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
ரேடியோ ஜாக்கியாக இருந்து நடிகர் ஆனவர் மிர்சி சிவா. சென்னை 28 படத்தின் மூலம் நடிகரான இவர் அதன் பிறகு சரோஜா, தமிழ் படம், வா, கலகலப்பு, தில்லுமுல்லு, வணக்கம் சென்னை, மசாலா படம், அட்ரா மச்சான் விசிலு, உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது பார்ட்டி மற்றும் தமிழ்படம் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சின்னத்திரை தொகுப்பாளராகியிருக்கிறார் சிவா. சமீபத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இது குழந்தைகளின் அறிவுத்திறன் வளர்க்கும் நிகழ்ச்சி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சி குறித்து அதன் தயாரிப்பாளர் சி.சுதாகர் கூறியதாவது:
தொலைக்காட்சியை கண்டு ரசிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் அறிவை வளர்க்கும் வகையிலும், இதுவரை யாரும் காணாத ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தர வேண்டும் என்ற எண்ணமும் பொறுப்பும் எங்களிடம் இருந்தது. ஷோவிற்கு கொண்டு வரும் திறமையான குழந்தைகள் உலக அளவில் கண்டறியப்படுவார்கள் என நம்புகிறேன். குழந்தைகளின் தன்னம்பிக்கையை பாதிக்கும் மதிப்பெண் கொடுப்பது மற்றும் நீக்குதல் என்ற விஷயமே இந்த ஷோவில் கிடையாது. அதிரடி சிறப்பு விருந்தினர்கள், குழந்தைகளின் திறமைகளை அலசும் வல்லுனர்களின் கருத்து , ஆகியவை இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாகும். என்கிறார் சுதாகர்.