வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா |
இப்போதெல்லாம் சரித்திரம் மற்றும் புராண தொடர்களுக்குதான் மவுசு அதிகம். அந்த வரிசையில் சரித்திரமும், கற்பனையும் கலந்த தொடராக ஜி.தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது தெனாலிராமன். திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
தெனாலிராமன் கதைகளை அந்தக் கால குழந்தைகள் புத்தகம் வழியாக படித்தார்கள். பாட்டி கதைகள் மூலம் கேட்டார்கள். ஆனால் இந்தக்கால குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பு குறைவு என்பதால் தெனாலிராமன் கதைக்கு சிறுவர்களிடையே நல்ல மவுசு ஏற்பட்டிருக்கிறது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை இந்த தொடரை பார்க்க அனுமதிக்கிறார்கள். தென்னாலி ராமனின் குறும்பு, சேட்டைகள் அவர்களை மகிழ்விக்கின்றன. துண்டு துண்டாக இருக்கும் தெனாலிராமன் கதைகளை ஒன்றிணைத்து தொடராக ஒளிபரப்புகிறார்கள். 16ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயர் அவையில் புலவராக இருந்த தெனாலிராமன் மன்னருக்கு ஏற்படும் சிக்கல்களை எளிய முறையில் எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் கதை. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்குகிறார்கள்.
இந்த சீரியல் இந்தி சீரியலான தெனாலிராமா என்பதன் தமிழாக்கம் ஆகும். இதனை பிரபல கன்னட இயக்குனர் டி.எஸ்.நாகபரணா இயக்குகிறார். தெனாலிராமனாக பாலிவுட் நடிகர் கிருஷ்ண பரத்வாஜ் நடிக்கிறார். இவருடன் பங்கஜ் பெரி தாத்தாச்சரியாராகவும், மனவ் கோகில் கிருஷ்ணதேவராயராகவும் நடிக்கிறார்கள்.