‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
திரைப்பட நடன இயக்குனரான கலா மாஸ்டர், மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். அந்த நிகழ்ச்சி வெற்றிபெறவே அதன் மூலம் புகழ்பெற்றார். அதன் பிறகு திரைப்பட நிகழ்ச்சிகளில் நடனம் அமைத்தார். பல நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார். தற்போது ஓடிவிளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சீரியல் இயக்குனராகி இருக்கிறார் கலா மாஸ்டர். நடனத்தை மையமாக கொண்ட சீரியல் ஒன்றை இயக்கி வருகிறார். கிராமத்தில் பிறந்த வளர்ந்த ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் நடனத்தில் எப்படி உயர்ந்த இடத்தை பிடிக்கிறார்கள். அதற்கு அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன அவற்றை வென்று அவர்கள் எப்படி உயர்ந்த இடத்தை பிடிக்கிறார்கள் என்பதுதான் கதையாம். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.