ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
முன்னணி தொலைக்காட்சியில் நட்சத்திர தொகுப்பாளினியாக இருப்பவர் மணிமேகலை. கடந்த சில ஆண்டுகளாகவே ஹூசைன் என்பவரை காதலித்து வந்தார். ஆனால் அவர் காதலை பெற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மதம் தாண்டிய காதல் என்பதால் கடுமையாக எதிர்த்தார்கள். பெற்றவர்கள் சம்மத்திற்காக கடந்த 6 மாதங்கள் காத்திருந்த மணிமேகலை நேற்று ஹூசைனை திடீரென பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து மணிமேகலை தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நானும் ஹூசைனும் இன்று(நேற்று டிச.,6) திருமணம் செய்து கொண்டோம். இது ஓர் அதிரடி பதிவு திருமணம். என் திருமண விஷயத்தில் என் தந்தையை என்னால் சமாதானப்படுத்த முடியவில்லை. எல்லாம், என் கை மீறிச் சென்றதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஒருநாள் என் தந்தை என்னைப் புரிந்து கொள்வார் என நான் நம்புகிறேன். காதலுக்கு மதமே இல்லை. லவ் யு ஹுசைன். ஸ்ரீராமஜெயம், அல்லா.
இவ்வாறு மணிமேகலை தெரிவித்திருக்கிறார்.