தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு இது. இதையொட்டி பல நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் ராஜ் தொலைக்காட்சி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு. அவரது சினிமா வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை ஆகியவை பற்றி பேசுகிறது இந்த தொடர். அவர் சந்தித்த சோதனைகள், செய்த சாதனைகள் படக் காட்சிகளாக விரிகிறது. அரசியல் உலகில் எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்தவர்கள். சினிமாவில் இணைந்து நடித்தவர்கள் ஆகியோரின் நேர்காணலும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.
எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் காட்சிகள், பாடல்கள் ஆகியவற்றை கொண்டு நிகழ்ச்சியை விறுவிறுப்பாக ஒளிபரப்புகிறார்கள்.